அஜித் பட இயக்குனரின் அடுத்த படத்தில் அதிதிஷங்கர்? அடுத்தடுத்து குவியும் வாய்ப்புகள்!

அஜித் பட இயக்குனரின் அடுத்த படத்தில் அதிதிஷங்கர்? அடுத்தடுத்து குவியும் வாய்ப்புகள்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர், கார்த்தி நடித்த ‘விருமன்’ திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான நிலையில் தற்போது அவர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’மாவீரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அஜீத் பட இயக்குனரின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க அதிதிஷங்கர் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவான ‘விருமன்’ என்ற திரைப்படத்தில் அதிதிஷங்கர் நடிகையாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து அவர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’மாவீரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் அவருடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜீத் நடித்த ’பில்லா’ ’ஆரம்பம்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் அடுத்த திரைப்படத்தில் நாயகியாக அதிதிஷங்கர் நடிக்க இருப்பதாகவும் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

அதிதிஷங்கருக்கு அடுத்தடுத்து பெரிய நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பு குவிந்து வருவது கோலிவுட் திரையுலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES