ஒரே நேரத்தில் ரஜினி, தனுஷ் படங்களில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர்?

ஒரே நேரத்தில் ரஜினி, தனுஷ் படங்களில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் பிரபல நடிகர் ஒருவர், தனுஷ் நடித்து வரும் ’கேப்டன் மில்லர்’ படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கின்றார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகர் சிவராஜ்குமார் தற்போது தனுஷ் நடித்து வரும் ’கேப்டன் மில்லர்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ’கேப்டன் மில்லர்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பில் சிவராஜ்குமார் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் அஜித்தின் ’துணிவு’ படத்தில் நடித்து வரும் ஜான் கொகைன், சந்தீப் கிஷான் மற்றும் நிவேதிதா சதீஷ் ஆகியோர் நடித்து வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜிவி பிரகாஷ் இசையில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES