என் படத்தில் நீ நடிக்க வேண்டாம்.. நேற்று வெளியான படத்தின் ஹீரோவிடம் கூறிய விஜய்!

என் படத்தில் நீ நடிக்க வேண்டாம்.. நேற்று வெளியான படத்தின் ஹீரோவிடம் கூறிய விஜய்!

’இனிமேல் நீ என் படத்தில் நடிக்க வேண்டாம்’ என நேற்று வெளியான படத்தின் ஹீரோவிடம் நடிகர் விஜய் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளன.

நேற்று வெளியான 4 படங்களில் ஒன்று சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’காபி வித் காதல்’ என்பதும் இந்த படத்தின் ஹீரோக்களில் ஒருவர் ஜெய் என்பதும் தெரிந்ததே. இந்த படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் நடிகர் ஜெய் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சில மறக்க முடியாத விஷயங்களை கூறியுள்ளார்.

விஜய் நடித்த ’பகவதி’ திரைப்படத்தில் ஜெய் அவருடைய சகோதரர் கேரக்டரில் நடித்து இருந்தார் என்பதும் இந்த படம் வெளியாகி நேற்றுடன் 20 ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து இந்த படம் குறித்த மலரும் நினைவுகளை ஜெய் அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

’பகவதி’ படத்தில் நடிக்கும் போது தான் பதட்டமாக இருந்ததாகவும் ஒரு சில காட்சிகளில் பல ஷாட்கள் எடுக்கப்பட்டதாகவும் கூறிய ஜெய், அப்போதெல்லாம் விஜய் தனக்கு ஆறுதல் கூறுவார் என்று பயப்படாமல் நடி என்று தைரியம் அளிப்பார் என்றும் கூறினார்.

இந்த படம் ஹிட்டானதை அடுத்து மீண்டும் ஒரு படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்ததாகவும் ஆனால் ஹீரோவாக நடிப்பதில் நீ முயற்சி செய்ய வேண்டும் என்றும் என் படத்தில் நடிக்க வேண்டாம் என்று எனக்கு அறிவுரை கூறியதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும் விஜய்யுடன் சரியான நேரத்தில் ஒரு படத்தில் நடிக்க நான் ஆர்வமுடன் காத்திருக்கின்றேன் என்றும் ஜெய் கூறினார். விஜய் படத்தில் தற்போது பல முன்னணி ஹீரோக்கள் நடித்து வரும் நிலையில் ஜெய்க்கும் விரைவில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES