விஜய்சேதுபதி நடிக்கும் முதல் வெப்தொடர்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

விஜய்சேதுபதி நடிக்கும் முதல் வெப்தொடர்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் நடித்த முதல் படம் குறித்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளன.

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ’தி ஃபேமிலி மேன்’ என்ற தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பதும் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவான இந்த தொடரில் மனோஜ் பாஜ்பாய், சமந்தா, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகி வரும் புதிய தொடர் ‘ஃபார்சி. விஜய் சேதுபதி மற்றும் ஷாகித் கபூர் இணைந்து நடித்துள்ள இந்த வெப்தொடரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. வரும் பிப்ரவரி 10ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் இந்த தொடர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி மற்றும் ஷாகித் கபூரின் தோற்றத்துடன் கூடிய இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. குறிப்பாக விஜய் சேதுபதியின் ஃபர்ஸ்ட்லுக்கில் வில்லத்தனமான தோற்றத்தில் அவர் இருப்பதை பார்க்கும்போது இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தொடரில் ரெஜினா உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் இந்த தொடர் மொத்தம் 8 எபிசோடுகளை கொண்டது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

LATEST News

Trending News

HOT GALLERIES