அமெரிக்க பங்குச்சந்தையில் அஜித்தின் 'துணிவு': லைகாவின் அதிரடி அறிவிப்பு!

அமெரிக்க பங்குச்சந்தையில் அஜித்தின் 'துணிவு': லைகாவின் அதிரடி அறிவிப்பு!

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் 11ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இன்னும் மூன்றே நாட்களில் திரையரங்குகளில் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்ற லைகா நிறுவனம் வித்தியாசமான முறையில் புரமோஷன் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக துபாயில் பறக்கும் பலூனில் இருந்து கொண்டே போஸ்டர் வெளியிட்டது, நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் டிரைலர் வெளியானது என வித்தியாசமான முயற்சிகளில் இந்த படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் புரமோஷன் செய்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது முதல் முறையாக அமெரிக்க பங்குச் சந்தை கட்டிடமான நாஸ்டாக்கில் ’துணிவு’ படத்தின் போஸ்டர் வெளியாகவுள்ளது. ஒரு இந்திய திரைப்படத்தின் போஸ்டர் இந்த கட்டிடத்தில் வெளியாவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித், மஞ்சுவாரியர், வீரா, ஜான் கொகைன் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES