விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2': ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2': ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

விஜய் ஆண்டனி நடித்த ’பிச்சைக்காரன் 2’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் செய்தியை அதிகாரப்பூர்வமாக விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார்.

சமீபத்தில் ’பிச்சைக்காரன் 2’ படத்தின் முதல் நான்கு நிமிட காட்சிகள் வெளியானது என்பதும் அதிலிருந்து இந்த படத்தின் கதை மூளை மாற்று அறுவை சிகிச்சையால் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகள் குறித்து பேசுவதாகவும் தெரியவந்தது.

விஜய் ஆண்டனி இயக்கிய இசையமைத்து உள்ளதோடு அவரே படத்தொகுப்பு செய்துள்ள இந்த படத்தில் யோகி பாபு, காவியா தபார், ஜான்விஜய், ஒய்ஜி மகேந்திரா உட்பட பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் இந்த படம் ’பிச்சைக்காரன் ’படம் போலவே வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES