ஜெயம் ரவியின் 'அகிலன்' ரன்னிங் டைம் இவ்வளவு தானா?

ஜெயம் ரவியின் 'அகிலன்' ரன்னிங் டைம் இவ்வளவு தானா?

ஜெயம் ரவி நடித்த ‘அகிலன்’ திரைப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூஏ’ சான்றிதழ் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ள நிலையில் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் கல்யாண் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அகிலன்’ திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார் என்பதும் மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம் சிஎஸ் இசையில் உருவான இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ரன்னிங் டைம் 135 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 15 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான தனுஷின் ’வாத்தி’ திரைப்படமும் கிட்டத்தட்ட இதே ரன்னிங் டைம் தான் என்றும் அந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 19 நிமிடங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES