எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென போன் செய்த நடிகர் அஜித்.. என்ன காரணம்?

எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென போன் செய்த நடிகர் அஜித்.. என்ன காரணம்?

முன்னாள் தமிழக முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நடிகர் அஜித் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக பொதுக்குழு வழக்கு கடந்த சில வாரங்களாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி அணிக்கு சாதகமாக வந்தது. இதனை அடுத்து இடைக்கால பொதுச்செயலாளராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் நடிகர் அஜித்தும் தொலைபேசி மூலம் அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் அஜித் குமார் தந்தை மறைவிற்கு தொலைபேசி வாயிலாக எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES