45 வயது நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர் - வெற்றி அடையுமா இந்த ஜோடி..!

45 வயது நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர் - வெற்றி அடையுமா இந்த ஜோடி..!

சின்னத்திரை மூலம் தனது திரை பயணத்தை தொடங்கி தற்போது பிஸி ஹீரோயினாக இருப்பவர் பிரியா பவானி ஷங்கர். இவர் "மேயாத மான்" திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பின் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே, போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் நடித்து திரைக்கு வந்த படம் "பொம்மை". இதில் எஸ்.ஜே. சூர்யாவுக்கு இணையாக தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்நிலையில் பிரியா பவானி ஷங்கர் அடுத்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோவாக இருப்பவர் விஷால்.

இவருடைய 34 வது படமான இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இதை கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோ சவுத் இணைந்து தயாரிக்கிறது.

45 வயது நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர் - வெற்றி அடையுமா இந்த ஜோடி | Vishal To Pair Up With Popular Actress

இயக்குனர் ஹரி மற்றும் விஷால் இணையம் மூன்றாவது படம் இது என்பதால் மக்களுக்கு இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இது அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக உள்ளது.

முதல் முறையாக இணையும் விஷால் மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஜோடி வெற்றியடையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இயக்குனர் ஹரி இயக்கிய "யானை" படத்தில் பிரியா பவனி சங்கர் நடித்தது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News