'துருவ நட்சத்திரம்': ஒரு வழியாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட கௌதம் மேனன்..!

'துருவ நட்சத்திரம்': ஒரு வழியாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட கௌதம் மேனன்..!

கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் ’துருவ நட்சத்திரம்’ என்ற திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது தடை பட்டதாகவும் பின்னர் ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் 8 ஆண்டுகள் கழித்து தற்போது ரிலீசுக்கு இந்த படம் தயாராகி வருகிறது என்பதும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஏற்கனவே ’துருவ நட்சத்திரம்’ குறித்த சில செய்திகள் வெளியான நிலையில் தற்போது கௌதம் மேனன் அதிகாரபூர்வமாக இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். ஜூலை 19ஆம் தேதி இந்த பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ’துருவ நட்சத்திரம்’ படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை இல்லாத அளவில் தமிழில் ஒரு ஸ்டைலிஷான ஆக்சன் படமாக இந்த படம் இருக்கும் என்று கூறப்படுவதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா உள்பட பலர் நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES