'லியோ' படத்தில் ரோலக்ஸ் கேரக்டரா? வேற லெவல் தகவல்..!

'லியோ' படத்தில் ரோலக்ஸ் கேரக்டரா? வேற லெவல் தகவல்..!

லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள் என்றாலே LCU என்ற லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் காட்சிகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. குறிப்பாக அவரது ’விக்ரம்’ திரைப்படத்தில் ’கைதி’ படத்தில் வந்த டெல்லி கேரக்டரின் குரல் மட்டும் ஒலிக்கும் என்பது தெரிந்ததே.

அதேபோல் ’லியோ’ திரைப்படத்தில் ஒரு சில LCU காட்சிகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் இதுவரை பதில் அளிக்கவில்லை என்றாலும் ’லியோ’ படக்குழுவினர்களிடமிருந்து கசிந்த தகவல் படி கண்டிப்பாக ’லியோ’ படத்தில் LCU காட்சிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’விக்ரம்’ திரைப்படத்தில் கடைசி ஐந்து நிமிடங்களில் வந்து கலக்கிய சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் ’லியோ’ திரைப்படத்தில் இடம் பெற்று இருப்பதாகவும் ’லியோ’ கேரக்டரில் நடித்த விஜய்யுடன் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்த சூர்யா போனில் பேசுவது போன்ற காட்சி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை படம் பார்த்த பிறகு தான் தெரியவரும் என்றாலும் இது போன்ற தகவல்கள் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது என்று குறிப்பிடத்தக்கது

LATEST News