காதலியை பகிரங்கமாக அறிவிக்கின்றாரா விஜய் தேவரகொண்டா... நெட்டிசன்களின் எல்லை மீறிய கற்பனைகள்..!

காதலியை பகிரங்கமாக அறிவிக்கின்றாரா விஜய் தேவரகொண்டா... நெட்டிசன்களின் எல்லை மீறிய கற்பனைகள்..!

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா ஒரு பெண்ணின் கையை பிடித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து, விரைவில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை கூறுகிறேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. அவர் சமந்தாவுடன் நடித்த ’குஷி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் விஜய் தேவரகொண்டா, ஒரு பெண்ணின் கையை பிடித்திருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு ’என் வாழ்க்கையில் முழு சந்தோஷம் என்று கூறியுள்ளார். மேலும் ’இது குறித்து அப்டேட் விரைவில் கொடுப்பேன்’ என்றும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து விஜய் தேவரகொண்டாவின் மனதை கவர்ந்த பெண் யார் என்று நெட்டிசன்கள் தங்கள் கற்பனை குதிரையை கட்டவிழ்த்து விடுகின்றனர். விஜய் தேவரகொண்டா பிடித்திருக்கும் அந்த கைக்கு சொந்தக்காரர் ராஷ்மிகா மந்தனா என்று ஒரு சிலர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் தேவரகொண்டா, விரைவில் தனது காதலியை பகிரங்கமாக அறிவிக்க இருக்கும் நிலையில் அவர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News