என்னம்மா பாம்பா.. கோபிநாத் வேட்டிக்குள் பல்லியை விட்ட பிரபலங்கள்- சிரிப்பில் முழ்கிய அரங்கம்!
நிகழ்ச்சியில் கோபிநாத் வேட்டிக்குள் பல்லியை விட்ட பிரபலங்களின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா.
இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பிரபல தொகுப்பாளர் கோபிநாத் இருந்து வருகின்றார்.
பல வருடங்கள் கடந்த நீயா நானா நிகழ்ச்சி கோபிநாத் அளவிற்கு யாரும் தொகுத்து வழங்காத காரணத்தினால் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு தனி மவுசு எழுந்துள்ளது.

இந்த நிலையில், இந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரபலங்கள் கலந்து கொண்டு தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்துள்ளனர்.
அதில் இரண்டு பெண்கள் தங்களின் பரிசை எதிர் அணியில் அமர்ந்திருக்கும் அம்மாக்களிடம் மாற்றிக் கொள்கிறார்கள்.
பரிசை பிரித்து பார்த்த போது அதில் பொம்மை பல்லியொன்று வைக்கப்பட்டுள்ளது. ஆவலுடன் எதிர் பார்த்து பரிசை பிரித்த பெண் பயத்தில் கோபிநாத் மேல் தூக்கி போட்டுள்ளார்.
பயந்த பெண்ணை பார்த்த கோபிநாத், “ என்னம்மா பாம்பா?...” என பயத்தில் கத்தியுள்ளார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் “ கோபிநாத் நீங்க பாம்பிற்கு பயமா?” என கிண்டலடித்து வருகிறார்கள்.