கல்யாணத்துக்கு பின் குட் நியூஸ் சொன்ன விஜே மணிமேகலை!! குவியும் வாழ்த்துக்கள்..
சன் மியூசிக் இல் தொகுப்பாளினியாக பணிபுரிந்து பின்னர் விஜய் டிவி பக்கம் வந்து பெரிய அளவு பிரபலமான விஜே மணிமேகலை 2017 ஆம் ஆண்டு ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் வேறு வேறு மதத்தவர்கள் என்பதால் அந்த சமயத்தில் இவர்களுடைய திருமணம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மணிமேகலையின் குடும்பத்தில் இவர்களுடைய திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து அண்மையில் தான் மணிமேகலை குடும்பத்தார் மணிமேகலையோடு பேச ஆரம்பித்திருக்கிறார்கள் அதுபோலஹுசைன் லாரன்ஸ் மாஸ்டரிடம் டான்ஸராக பணியாற்றி வந்தார்.
அந்த வகையில் இவர் லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் சைட் டான்ஸராக டான்ஸ் ஆடுவதை பார்த்து அவர் மீது இம்ப்ரஸ் ஆய் அவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த சமயத்தில் தான் இரண்டு குடும்பத்தாரின் சப்போர்ட் இல்லாமல் மணிமேகலை தன்னுடைய வாழ்க்கையை தொடங்குவதற்கு அதிகளவு கஷ்டப்பட்டாலும் அதை சவாலாக எடுத்துக் கொண்டு முன்னேறி இருக்கிறார்.
இந்நிலையில் மணிமேகலை எதை செய்தாலும் அதை தன் ரசிகர்களோடு பகிர்ந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இவர் சூரிய வம்சம் படத்தில் தேவயானி சின்னராசு எப்படி குடும்பத்தின் தயவில்லாமல் முன்னேறி மேலே சென்றார்களோ அதுபோல தாங்களும் வருவோம் என்ற தன்னம்பிக்கையோடு வாழ்க்கை நடத்துகிறார்.
அதுமட்டுமில்லாமல் சூரியவம்சம் பாடலை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தக்கூடிய இவர் சென்னையில் வாடகைக்கு குடியிருந்தவை அடுத்து தற்போது புதிய வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார் அந்த மகிழ்ச்சியான செய்தியை நேற்று பகிர்ந்து இருக்கிறார்.
ஏற்கனவே தன் சொந்த ஊரில் வீடு கட்டிக்கொண்டு இருக்கும் மணிமேகலை தற்போது சென்னைகளும் ஒரு வீடு வாங்கி இருக்கிற விஷயம் அனைவரது பாராட்டுதல் கிடைக்கும் பெற்றிருப்பது புது வீட்டில் கிரகப்பிரவேசம் செய்து குடியேறி இருக்கின்ற புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.
இதை அடுத்து இந்த விஷயத்தை தன் வாழ்நாள் சாதனையாக சொல்லி இருக்கும் மணிமேகலை வீட்டின் பணிகள் எல்லாம் முடிந்து விட்டது ஸ்ரீராமஜெயம், மாஷா அல்லா என்று பதிவிட்டு இந்த பதிவினை இன்ஸ்டால் பகிர்ந்து இருக்கிறார்.