அது நானில்லை..ஆள்மாறாட்டம் செய்றாங்க!! நடிகை ருக்மணிக்கு வந்த பிரச்சனை..
நடிகை ருக்மணி வசந்த், கன்னடத்தில் வெளிவந்த சப்த சாகரதாச்சே எல்லோ படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர். அதை தொடர்ந்து, தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஏஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. பின் ருக்மணி வசந்த் நடிப்பில் மதராஸி திரைப்படம் வெளியானது. இப்படத்தில் ருக்மணி வசந்த் நடிப்பை அனைவரும் பாராட்டி வந்தனர்.
ருக்மிணி வசந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் காந்தாரா சாப்டர் 1. இதனையடுத்து பல படங்களில் கமிட்டாகி வரும் ருக்மணி, இணையத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
அதில், முக்கியமான எச்சரிக்கை, விழிப்புணர்வு செய்தி, 9445893273 என்ற எண்ணை பயன்படுத்தி ஒருவர் என்னைப்போல் ஆள்மாறாட்டம் செய்து பல நபர்களை தொடர்பு கொண்டது என் கவனத்திற்கு வந்தது.

இந்த எண் என்னுடையது இல்லை என்பதையும் அதிலிருந்து வரும் எந்த செய்திகளும், அழைப்புகளும் முற்றிலும் போலியானது என்பதையும் நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன், தயவுசெய்து இதுபோன்ற செய்திகளுக்கு பதிலளிக்கவோ, ஈடுபடவோ வேண்டாம்.
ஆள்மாறாட்டம் சைபர் குற்றத்தின் கீழ் வருகிறது. இதுபோன்ற மோசடி மற்றும் தவறான செயல்களில் ஈஅடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
எந்தவொரு தெளிவுப்படுத்தலுக்கும் அல்லது சரிப்பார்ப்புக்கும், நீங்கள் நேரடியாக என்னை, அல்லது என் குழுவை தொடர்பு கொள்ளலாம். உங்கள் புரிதலுக்கும் ஒத்துழைப்புக்கும் அனைவருக்கும் நன்றி, ஆன்லைனில் விழிப்புடனும் பாதுக்காப்பாகவும் இருங்கள் என்று பதிவிட்டுள்ளார் நடிகை ருக்மணி.
🚨 Important Alert & Awareness Message 🚨
— rukmini (@rukminitweets) November 7, 2025
It has come to my attention that an individual using the number 9445893273 is impersonating me and reaching out to various people under false pretenses.
I want to clarify that this number does not belong to me, and any messages or calls…