20 வருட சினிமா வாழ்க்கை!! 35 வயதாகியும் ஸ்டார் நடிகையாக முடியாத அஜித் பட நடிகை..

20 வருட சினிமா வாழ்க்கை!! 35 வயதாகியும் ஸ்டார் நடிகையாக முடியாத அஜித் பட நடிகை..

சினிமாவில் சிலருக்கான அங்கீகாரம் என்பது உடனே கிடைத்துவிடாது. சிலருக்கு அது ஒரு எட்டாக்கனி போல் தான். திறமை இருந்தும் சிலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் முன்னேறும் வாய்ப்பை இழந்து வருவார்கள். அப்படி ஒரு நடிகை சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகளாக இருந்தும் அவருக்கான அங்கீகாரம் பெரியளவில் கிடைக்கவில்லை. அந்த நடிகை தான் நடிகை ரெஜினா கசாண்ட்ரா.

20 வருட சினிமா வாழ்க்கை!! 35 வயதாகியும் ஸ்டார் நடிகையாக முடியாத அஜித் பட நடிகை.. | Actress 20 Years Cinema Till Not Get Star Heroine

சென்னையில் பிறந்த ரெஜினாவின் தந்தை ஆங்கிலோ இந்தியன் என்று கூறப்படுகிறது. சென்னை பல்கலைகழகத்தில் சைக்காலஜி படித்த ரெஜினா, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். கடந்த 2005ல் கண்ட நாள் முதல் பட்த்தின் மூலம் அறிமுகமாகி அழகிய அசுரா, சூர்யா காந்தி போன்ற கன்னட படத்திலும் நடித்து அறிமுகமாகினார்.

2012ல் சிவா மனசுலோ ஸ்ருதி என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகினார். அறிமுகமாகி பல ஆண்டுகள் கழித்து 2013ல் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் தான் ரெஜினாவிற்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

20 வருட சினிமா வாழ்க்கை!! 35 வயதாகியும் ஸ்டார் நடிகையாக முடியாத அஜித் பட நடிகை.. | Actress 20 Years Cinema Till Not Get Star Heroine

தமிழில் மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், சுலுக்குவார்பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை, காஞ்சூரிங் கண்ணப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

சமீபத்தில் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்த ரெஜினா, மீண்டும் அஜித்தின் அடுத்த படத்திலும் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன் தாராவுடன் நடித்தும் வருகிறார்.

அப்படி சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகளாகி ஸ்டார் நடிகைக்கான அந்தஸ்த்தை பெறாமல் இருக்கிறார் ரெஜினா. இருப்பினும் கிடைக்கும் வாய்ப்பை பெற்று நடித்து தன்னுடைய திறமையை காட்டி வருகிறார் ரெஜினா.

கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி ரெஜினா தன்னுடைய 35வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery

LATEST News

Trending News