திருமணத்திற்கு பின் டிரெடிஷ்னல் லுக்கில் கலக்கும் நடிகை சமந்தா!! ரீசெண்ட் புகைப்படங்கள்..
இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் சமந்தாவுக்கு சமீபத்தில் இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் ஈஷா யோகா மையத்தில் நடந்தது.

திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக, ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை இருவருக்கும் தெரிவித்தனர்.
சமீபத்தில் நடிகை சமந்தா தனது மாமனார் மாமியாருடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம், தனது கணவருடன் நடிகை சமந்தா ஜோடியாக விமான நிலையத்திற்கு வந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் ஹைதராபாத்திற்கு கடைத்திறப்பு விழாவிற்கு சென்றுள்ள சமந்தா, சேலையில் டிரெடிஷ்னல் லுக்கில் சென்றுள்ளார். சேலையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

