ஜனநாயகன் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய பராசக்தி... ட்ரெய்லரிலேயா SK-விடம் அடிவாங்கிய விஜய்..!
2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படமும், சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இது விஜய்யின் கடைசி படம் என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அதேபோல் பராசக்தி, சிவகார்த்திகேயனின் 25வது படம் என்பதால் அதுவும் மிகப்பெரிய ஹைப்போடு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த இரு படங்களும் அடுத்தடுத்த நாள் ரிலீஸ் ஆக உள்ளது, ஜனநாயகன் ஜனவரி 9-ம் தேதியும், பராசக்தி ஜனவரி 10ம் தேதியும் திரைக்கு வர உள்ளது. இந்த இரண்டு படங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த ஜனவரி 3-ந் தேதி மாலை 6.45 மணிக்கு ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த ட்ரெய்லர் ரிலீஸ் ஆன உடனே செம வைரல் ஆனதோடு, யூடியூப்பில் வியூஸ்களை அடிச்சு நொறுக்கியது. ஜனநாயகன் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகி இரண்டு நாட்களில், இதற்கு யூடியூப்பில் 3.87 கோடி வியூஸ் கிடைத்திருக்கிறது. அந்த ட்ரெய்லருக்கு 12 லட்சத்திற்கு மேல் லைக்குகளும், 87 ஆயிரத்திற்கும் மேல் கமெண்டும் வந்திருந்தன. ஒரே நாளில் அதிக பார்வைகளை பெற்ற தமிழ் பட ட்ரெய்லர் என்கிற சாதனையையும் ஜனநாயகன் ட்ரெய்லர் படைத்திருந்தது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் ஜனவரி 4-ந் தேதி மாலை 6 மணிக்கு ரிலீஸ் செய்யப்பட்டது. இதன் ட்ரெய்லருக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இந்த ட்ரெய்லர் ரிலீஸ் ஆன ஒரே நாளில் 4 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று ஜனநாயகன் சாதனையை முறியடித்து உள்ளது. இந்த ட்ரெய்லருக்கு 4.2 லட்சம் லைக்குகளும், 16 ஆயிரம் கமெண்டுகளும் வந்துள்ளன. இதன்மூலம் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் ட்ரெய்லர் என்கிற ஜனநாயகன் பட சாதனையை பராசக்தி முறியடித்து உள்ளது.
ஜனநாயகனை வீழ்த்த வேண்டும் என்பதற்காக Botகள் மற்றும் விளம்பரம் மூலம் பராசக்தி பட டிரெய்லரின் வியூஸ்களை அதிகரித்துக் காட்டி இருக்கிறார்கள் என்று நெட்டிசன்கள் ஆதாரங்களை வெளியிட்டு வருகின்றனர். ஜனநாயகன் ட்ரெய்லரிலேயே அதை பார்க்கும் முன் பராசக்தி ட்ரெய்லர் விளம்பரம் போல் ஓடுவது போல் வைத்திருந்ததையும் சில ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைரலாக்கினர். இந்த சாதனையை பெருமையாக பராசக்தி படக்குழு பகிர்ந்தாலும், இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். வியூஸ் அதிகமாக்க முயற்சி செய்தவர்கள் கமெண்டுகளையும், லைக்குகளையும் அதிகம் போட மறந்துவிட்டார்களா எனவும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.