“DNA சோதனைக்கு ஏன் பயந்து ஓடுகிறார்?” – மாதம்பட்டி ரங்கராஜை நோக்கி ஜாய் கிரிசில்டா எழுப்பும் பகீர் கேள்வி!

“DNA சோதனைக்கு ஏன் பயந்து ஓடுகிறார்?” – மாதம்பட்டி ரங்கராஜை நோக்கி ஜாய் கிரிசில்டா எழுப்பும் பகீர் கேள்வி!

பிரபல சமையல் கலை நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா முன்வைத்துள்ள புகார்கள் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் பிறந்த குழந்தையை அங்கீகரிக்க மறுப்பதாகக் கூறி சட்டப் போராட்டம் நடத்தி வரும் ஜாய் கிரிசில்டா, தற்போது அவர் மீது புதிய விமர்சனங்களை அடுக்கியுள்ளார்.

ஏன் பயந்து ஓடுகிறார்?! சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஆரம்பத்தில் இந்த விவகாரத்தை மறுத்து வந்த ரங்கராஜ், டிஎன்ஏ சோதனை மூலம் உண்மையை நிரூபிப்பதாகக் கூறியதைச் சுட்டிக்காட்டினார். எந்த வாயால் டிஎன்ஏ சோதனைக்குத் தயார் என்று சவால் விட்டாரோ, இப்போது அதற்கான சூழல் வரும்போது ஏன் பயந்து ஓடுகிறார்? என்று ஜாய் கிரிசில்டா ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்."குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும்" கடந்த மாதம் தனது குழந்தைக்குத் தந்தை யார் என்பதை உறுதிப்படுத்த டிஎன்ஏ சோதனை எடுக்க வேண்டும் என்று மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரை அதற்கான உரிய ஒத்துழைப்பை வழங்காமல் அவர் காலம் கடத்தி வருவதாகவும், இது உண்மையை மறைக்கும் முயற்சி என்றும் ஜாய் குற்றம் சாட்டுகிறார். மேலும், குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பதாலேயே அவர் தலைமறைவாக இருக்கிறார் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்."நீதி கிடைக்கும் வரை இந்த போராட்டம்"சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக அவதூறு பரப்பத் தடை விதிக்கக் கோரி ரங்கராஜ் தாக்கல் செய்த மனுத் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது குழந்தையுடன் போராடி வரும் ஜாய் கிரிசில்டா, தனக்கான நீதி கிடைக்கும் வரை இந்தப் போராட்டத்தைத் தொடரப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News