போட்றா வெடிய விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த Green Signal... ரசிகர்களே தயாரா?

போட்றா வெடிய விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த Green Signal... ரசிகர்களே தயாரா?

நடிகர் விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் திரைப்படம்.

எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெட்ச், மமிதா பைஜு, பாபி தியோல் என பலர் நடிக்க தயாராகியுள்ள இப்படம் அரசியல் கதைக்களத்தை மையப்படுத்திய ஒரு கதை. அனிருத் இசையில் தயாராகியுள்ள இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகிவிட்டது.

போட்றா வெடிய விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த Green Signal... ரசிகர்களே தயாரா? | Court Judgement For Vijay Jananayagan Movie

இன்று படம் வெளியாகி இருக்க வேண்டும் ஆனால் தணிக்கை குழு சான்றிதழ் கிடைக்காததால் அதில் பிரச்சனை ஏற்பட ரிலீஸ் தள்ளிப்போனதாக தயாரிப்பு குழு அறிவித்திருந்தனர். அதில் இருந்தே பிரபலங்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாக பதிவுகள் போட்டு வந்தனர்.

எல்லாம் தயாராகிவிட்டது, ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் பெற மட்டுமே பிரச்சனையாக இருந்தது. 

ஆனால் அந்த பிரச்சனையும் இப்போது முடிந்துவிட்டதாக தெரிகிறது. இன்று 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஜனநாயகன் விசாரணைக்கு வர, விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

LATEST News

Trending News