உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம்
கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் இருந்த கொண்டாட்டம், பரபரப்பு இப்போது அப்படியே சோகத்தில் முடிந்துவிட்டது.
காரணம் தளபதி விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் படம் ஜனவரி 9 நாளை ரிலீஸ் ஆகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் இதுவரை தணிக்கை குழு சான்றிதழ் கிடைக்காததால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதாக தயாரிப்பு குழு அறிவித்தனர்.

அந்த செய்தி வந்ததில் இருந்தே தமிழ் சினிமாவில் பரபரப்பு அடங்கிவிட்டது, கொண்டாட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது. ரசிகர்கள் பலரும் விஜய்யின் கடைசிப்படத்திற்கு இப்படி ஆனது நினைத்து வருத்தத்தில் உள்ளனர்.
சினிமா பிரபலங்களிலும் விஜய்யின் ரசிகர்கள் பலர் உள்ளனர். நேற்று முதலில் இருந்தே பிரபலங்கள் விஜய்யின் படம் வராதது குறித்து தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.
ஜெயம் ரவி தனது பதிவில், மனம் உடைந்துவிட்டேன் விஜய் அண்ணா. உங்கள் பக்கம் இருக்கும் கோடிக்கணக்கான தம்பிகளில் ஒருவனாக நானும் நிற்கிறேன். உங்களுக்கு தேதி எல்லாம் தேவையில்லை, நீங்கள் தான் ஓபனிங்கே. ரிலீஸ் எந்த தேதியாக இருந்தாலும் எங்களுக்கு பொங்கல் அப்போதுதான் தொடங்கும் என்றிருக்கிறார்.