போட்றா வெடிய.. வெளியானது ஜனநாயகன் புதிய ரிலீஸ் தேதி..! பொங்கல் Vibe ஆரம்பம்!

போட்றா வெடிய.. வெளியானது ஜனநாயகன் புதிய ரிலீஸ் தேதி..! பொங்கல் Vibe ஆரம்பம்!

நடிகர் தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் (Jana Nayagan) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9, 2026 அன்று உலகளவில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக படம் வெளியாகாமல் தடுமாறியது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு மற்றும் அதன் பின்னணியில் உள்ள மேல்முறையீடுகள் காரணமாக ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பும் கவலையும் நிலவியது.

படக்குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஜனவரி 9 அன்று நீதிபதி பி.டி. ஆஷா தலைமையிலான அமர்வு, படத்திற்கு U/A சான்றிதழ் உடனடியாக வழங்க உத்தரவிட்டது.

மேலும், படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு (Revising Committee) அனுப்பிய CBFC-யின் முடிவை ரத்து செய்தது. இந்தத் தீர்ப்பு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

ஆனால், CBFC சார்பில் இந்த உத்தரவுக்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்டு, தலைமை நீதிபதி அமர்வு இடைக்காலத் தடை விதித்தது. இதனால் வழக்கு ஜனவரி 21க்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், படத் தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் உச்சநீதிமன்றத்தில் அவசர மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு விசாரணைக்கு வரும் போது, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆரம்பத் தீர்ப்பே (U/A சான்றிதழ் வழங்க உத்தரவு) உறுதி செய்யப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, இன்று (ஜனவரி 12) தீர்ப்பு வெளியான பிறகு இன்று மாலை அல்லது நாளை மாலைக்குள் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும் என்றும், அதைத் தொடர்ந்து ஜனவரி 14, 2026 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் நம்பகமான வட்டாரங்களிடமிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த முன்னேற்றம் தமிழகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் தற்காலிகமாக தடைபட்டாலும், இப்போது மீண்டும் களைகட்டத் தொடங்கியுள்ளன.

விஜய்யின் அரசியல் பயணத்திற்கு முன்பு அவரது இறுதி திரைப்படமாக உருவான இந்தப் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.

LATEST News

Trending News