இரண்டாம் நாளில் பாதியாக குறைந்த பராசக்தி வசூல்! இப்படி ஆகிடுச்சே
பராசக்தி படம் கடந்த சனிக்கிழமை ஜனவரி 10ம் தேதி திரைக்கு வந்தது. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா என பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்து இருக்கின்றனர்.
விஜய்யின் ஜனநாயகன் உடன் மோதும் அளவுக்கு இந்த பட தயாரிப்பாளர் தைரியமாக ரிலீஸ் செய்தார். ஆனால் ஜனநாயகன் சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் ஆகாமல் போக இந்த படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைத்து பெரிய வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
முதல் நாளில் 27 கோடி, அதை தொடர்ந்து இரண்டு நாட்களில் 51 கோடி மொத்தமாக வசூல் வந்திருப்பதாக தயாரிப்பாளர் அறிவித்து இருக்கிறார்.

UKவில் பராசக்தி படம் முதல் நாளில் £87,842 வசூலித்து இருந்தது. ஆனால் இரண்டாம் நாளில் அது அப்படியே பாதியாக குறைந்துவிட்டது.
இரண்டாம் நாளில் £38,155 மட்டுமே வசூலித்து இருக்கிறது. மொத்தமாக இரண்டு நாட்களில் £125,997 வசூலித்து இருப்பதாக விநியோகஸ்தர் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்.