3 முறையில் திருமணம் செய்து... ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பெற்ற நடிகை யார் தெரியுமா?

3 முறையில் திருமணம் செய்து... ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பெற்ற நடிகை யார் தெரியுமா?

நடிகை ஒருவர் தன்னை விட 8 வயது இளையவனை காதலித்து மூன்று முறையில் திருமணம் செய்து மூன்று குழந்தைகள் பெற்ற நடிகையின் கதை பற்றி பதிவில் பார்க்கலாம்.

பாலிவுட் சினிமாவில் நடன இயக்குநராக அறிமுகமாகி, பின்னாளில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகை என பல அவதாரங்களில் முத்திரை பதித்தவர் ஃபரா கான்.

தனது நடனத் திறமையால் இந்தியத் திரையுலகில் தனித்த இடத்தைப் பிடித்த அவர், பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளையும் குவித்துள்ளார்.

3 முறையில் திருமணம் செய்து... ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பெற்ற நடிகை யார் தெரியுமா? | 8 Years Younger Man Marriage Actress History

நடனத் துறையைத் தாண்டி, ‘மைன் ஹூன் நா’, ‘ஓம் சாந்தி ஓம்’, ‘ஹேப்பி நியூ இயர்’ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி, ஒரு வெற்றிகரமான இயக்குநராகவும் ஃபரா கான் தன்னை நிரூபித்தார்.

குறிப்பாக ஷாருக் கான் நடித்த இந்த மூன்று படங்களின் மொத்த வசூல் மட்டும் சுமார் ₹624 கோடியை கடந்தது. இதுதவிர, ‘தீஸ் மார் கான்’ திரைப்படம் ₹101.8 கோடி வசூலித்தது.

இத்தனை சாதனைகளுக்குப் பின்னால் இருக்கும் ஃபரா கானின் காதல் கதை  பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது.

2004 ஆம் ஆண்டு வெளியான ‘மைன் ஹூன் நா’ திரைப்படத்தில், எடிட்டராக பணியாற்றியவர் தான் ஷிரிஷ் குந்தர். ஆரம்பத்தில் இவர்களுக்குள் காதல் இல்லை சண்டைகளே அதிகம்.

3 முறையில் திருமணம் செய்து... ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பெற்ற நடிகை யார் தெரியுமா? | 8 Years Younger Man Marriage Actress History

ஃபரா கான் விரும்பிய விதத்தில் எடிட்டிங் செய்யாமல், ஷிரிஷ் தன் ஸ்டைலில் மாற்றங்கள் செய்ததால் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படும் எனப்படுகின்றது.

ஒருகட்டத்தில் கோபமடைந்த ஃபரா கான், “ஒழுங்காக வேலை செய்யாவிட்டால் வேலையை விட்டு நீக்கிவிடுவேன்” என்று மிரட்டி கூட இருக்கிறார்.

ஆனால் ஃபராவுக்குத் தெரியாமல், ஷிரிஷ் பராவை காதலித்துக்கொண்டு இருந்துள்ளார். படப்பிடிப்புத் தளத்தில் அனைவரையும் தைரியமாக வழிநடத்தும் ஃபராவின் குணமும், அவரது துணிச்சலும் தான் ஷிரிஷை ஈர்த்ததாக அவர் பின்னாளில் வெளிப்படுத்தினார்.

3 முறையில் திருமணம் செய்து... ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பெற்ற நடிகை யார் தெரியுமா? | 8 Years Younger Man Marriage Actress History

ஒரு பார்ட்டியில், மிகவும் நேரடியாக ஷிரிஷ் தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார். “உனக்கு என்னை திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இருந்தால் மட்டும் என்னிடம் பேசு. இல்லையென்றால் என் நேரத்தை வீணடிக்காதே” என்ற அவரது வார்த்தை, ஃபரா கானை முதலில் திகைக்க வைத்தது.

அந்த நேரத்தில் காதலைப் பற்றி யோசிக்காத ஃபரா, ஷிரிஷின் நேர்மையும் வெளிப்படையான குணமும் தன்னை கவர்ந்ததாக கூறியுள்ளார். சில நாட்களுக்குப் பிறகு, அவரது புத்திசாலித்தனத்தையும் அக்கறையையும் உணர்ந்த ஃபரா கான், காதலை ஏற்றுக்கொண்டார்.

3 முறையில் திருமணம் செய்து... ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பெற்ற நடிகை யார் தெரியுமா? | 8 Years Younger Man Marriage Actress History

ஃபரா கானை விட ஷிரிஷ் 8 வயது இளையவர் ஃபரா கான் முஸ்லிம், ஷிரிஷ் பிராமணர் ஆனால் இந்த வேறுபாடுகள் எதுவும் அவர்களின் காதலைத் தடுக்கவில்லை.

இவர்கள் டிசம்பர் 9, 2004 அன்று திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் தனித்துவமானது.

சட்டப்படி பதிவு திருமணம்

இஸ்லாம் முறைப்படி நிக்காஹ்

இந்து முறைப்படி தாலி கட்டும் சடங்கு

திருமணத்திற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 2008 ஆம் ஆண்டு ஒரே பிரசவத்தில் ஒரு மகன், இரண்டு மகள்கள் என மூன்று குழந்தைகள் பிறந்தனர்.

3 முறையில் திருமணம் செய்து... ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பெற்ற நடிகை யார் தெரியுமா? | 8 Years Younger Man Marriage Actress History

ஜார், திவா, அன்யா என அவர்களுக்கு பெயரிட்டுள்ளனர். தற்போது மூன்று குழந்தைகளும் 18 வயதை கடந்த நிலையில், வெளிநாடுகளில் உயர்கல்வி பயின்று வருகின்றனர்.

திருமணத்தின் போது ஃபரா கானுக்கு 39 வயது, ஷிரிஷ் குந்தருக்கு 31 வயது.

அந்த காலகட்டத்தில் வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்துகொள்வது பாலிவுட்டில் பெரிய விவாதமாக பேசப்பட்டது. ஆனால், இவர்கள் கடந்த 21 ஆண்டுகளாக வெற்றிகரமான திருமண வாழ்க்கையின் மூலம் இந்த தம்பதி நிரூபித்து வருகின்றனர்.

LATEST News

Trending News