கழுத்தில் மாலையுடன் கம்ருதின், பார்வதி போட்ட ஆட்டம்... வைரலாகும் புகைப்படம்
பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டு காதலராக வெளியேறிய கம்ருதின், பார்வதி இருவரின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் தான் பார்வதி, கம்ருதின் இருவரும் ஆவர்.
மிகவும் அருமையாக விளையாடிய இவர்கள் இறுதியாக நிகழ்ச்சி முடிவதற்கு ஒரு சில நாட்கள் இருந்த நிலையில் ரெட் கார்டு பெற்று வெளியேறினர்.

போட்டியாளராக உள்ளே சென்றவர்கள் பின்பு காதலிக்கவும் தொடங்கினர். பார்வதியின் காதலுக்கு வீட்டில் சம்மதமும் கிடைத்தது.

இறுதியாக கார் டாஸ்கில் சாண்ட்ராவினை கீழே தள்ளிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் விஜய் சேதுபதி இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார்.
பின்பு கிராண்ட் ஃபினாலே அன்று இருவரையும் மேடைக்கு அழைத்து அவர்களிடம் பேசினார்.
