காதல் மனைவிக்கு கார் வாங்கி கொடுத்துள்ள பிக் பாஸ் ஷாரிக்.. வீடியோ இதோ
நட்சத்திர ஜோடிகளான ரியாஸ் - உமா ரியாஸ்-க்கு ஷாரிக் ஹசான் என்கிற மகன் இருக்கிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2024ஆம் ஆண்டு நடிகர் ஷாரிக், மரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது.

ஷாரிக் - மரியாவிற்கு ஒரு ஆண் குழந்தையும் கடந்த வருடம் பிறந்துள்ளது. இந்த நிலையில் ஷாரிக் தனது காதல் மனைவிக்காக ஒரு புதிய காரை பரிசாக வழங்கியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை ஷாரிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ..