விஜய் வென்றால் பனையூர் வாசலில் நிற்க வேண்டும்.. விஜய்யை விளாசிய அன்புமணி ராமதாஸ்!

விஜய் வென்றால் பனையூர் வாசலில் நிற்க வேண்டும்.. விஜய்யை விளாசிய அன்புமணி ராமதாஸ்!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடு பிடுத்து வருகிறது. நான்கு முனைப் போட்டி என்று அரசியல் களம் அமைந்தாலும், திமுக மிகத் தெளிவாக தேசிய ஜனநாயக கூட்டணியை நேரடியாக விமர்சித்து வருகிறார். அதேபோல் தேசிய ஜனநாயக கூட்டணியினரும் திமுகவை காட்டமாக விமர்சித்து வாக்கு கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் பெரம்பூரில் வாக்கு சேகரிக்க சென்ற, பாமகவின் அன்புமணி ராமதாஸ், விஜய்யை காட்டமாக அட்டாக் செய்து பிரசாரம் செய்தார்.

அன்புமணி பேசுகையில், " இந்த தொகுதியில் போட்டியிடும் விஜய் வெற்றி பெற்றார் என்றால் இந்த தொகுதி மக்கள் அனைவரும் பனையூரில் அவரது வீட்டு வாசலில் தான் நிற்க வேண்டும். ஆனால் பாமகவின் திலகபாமாவை நீங்கள் வெற்றி பெறச் செய்தால் அவர் உங்கள் வீட்டு வாசலில் நிற்பார். கரூர் துயரச் சம்பவம் குறித்து அனைவருக்கும் தெரியும், அவ்வளவு பெரிய துயர சம்பவம், நடந்த பின்னர், பாதிக்கப்பட்ட மக்கள் தான் விஜய்யைச் சென்று சந்தித்தனர். இந்த நிலைதான் உங்களுக்கும் ஏற்படும்.

PMK Anbumani Ramadoss Slams TVK Vijay At Perambur Constituency Election Campaign 2026

விளாசிய அன்புமணி: ஆனால் பாமகவின் திலகபாமா அடிப்படையில் ஒரு பாட்டாளி, இவர் சிவகாசிக்கு அருகில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையை 25 பெண்களைத் திரட்டி அடித்து உடைத்து அதற்காக சிறை சென்றவர். இப்படியான மக்களுக்காக நெற்றியில் வியர்வை சிந்த பணியாற்றும் பாட்டாளி உங்களுக்கு வேண்டுமா? இல்லை என்றால் ஏ.சி. பஸ்ஸில் வந்துவிட்டு, கையை அசைத்து விட்டு செல்லும் விஜய் வேண்டுமா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்" என்று விஜய்யை காட்டமாக அட்டாக் செய்து விமர்சித்துள்ளார்.

விஜய் : நடிகர் விஜய் இந்த தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இரண்டு தொகுதிகளிலும் முன்னுக்குப் பின் மாறான தகவல்களை கொடுத்துள்ளதால் அது பேசு பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக வயது, வழக்கு பின்னணி உள்ளிட்ட தகவல்கள் குறித்து மாற்றி மாற்றிக் கொடுத்துள்ளதால், இது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

PMK Anbumani Ramadoss Slams TVK Vijay At Perambur Constituency Election Campaign 2026

கவனம்: விஜய் போட்டியிடும் தொகுதி என்பதால் பெரம்பூர் தொகுதி அரசியல் தளத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. ரசிகர்களின் ஆதரவோடு வென்று விடலாம் என்று தவெக விஜய்யும், கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக செய்த நலத்திட்டங்களை எடுத்துக் கூறி அதன் மூலம் வென்று விடலாம் என்று திமுகவின் வேட்பாளர் ஆர்.டி. சேகரும், திமுகவின் நிர்வாக தோல்விகள் குறித்து மக்கள் மத்தியில் எடுத்துக் கூறி வென்று விடலாம் என்று தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக திலகபாமாவும் நம்பிக்கையுடன் உள்ளனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES