நடிகர் தொடங்கிய புதுத் தொழில்.. ரூட்டை மாற்றிய நடிகை.. அவுட் ஆஃப் கன்ட்ரோலில் ரிலேஷன்ஷிப்!
சென்னை: இந்த நடிகை இன்னும் கல்யாணம் ஆகாத முதிர் கன்னியாகவே வாழ்ந்து வருகிறார். சினிமாவில் காலடி எடுத்து வைத்த கொஞ்ச ஆண்டுகளுக்குளே நடிகை டாப் கியரில் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆனார். தெலுங்கு, தமிழ் என நடிகைக்கு ஏகபோக வரவேற்பு. நடிகை ஆடிய ஆட்டத்திற்கு பலரும் மயங்கி விழத் தொடங்கினர். ஒரு கட்டம் வரை நடிகை அமைதியாக இருக்க, அதன் பின்னர் நடிகைக்கு அட்வைஸ் கொடுத்தவர்களோ, இந்த சினிமாவில் சம்பாதிப்பது எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான், எனவே நிரந்தர வருமானத்திற்கு என்ன வழியோ அதை செய் என்று கூறியுள்ளார்கள்.
நடிகைக்கு முதலில் இது புரியாமல் இருக்க, அதன் பின்னர் பொன் முட்டையிடும் வாத்துவைத் தேடிப் பிடி என்று கூறி உள்ளார்கள். நடிகையும் சில நடிகர்கள், சில தொழிலதிபர்கள், சில அரசியல் புள்ளிகள் என பல இடங்களில் வலை வீசி, கூடுமானவரை நன்றாகவே சம்பாதித்துள்ளார்.
ஆனாலும் நடிகைக்கு நிரந்தரமாக பொன் முட்டையிடும் வாத்து தேவை என்று யோசித்து, அண்டை மாநிலங்களில் எல்லாம் தேடிப் பார்த்து, சலித்துப் போனவருக்கு தன் சொந்த மாநிலத்தில் இருந்த நடிகரை கடைசியாக தேர்வு செய்தாராம்.
குடும்பத்தை விட்டுவிட்டு: நடிகையின் இந்த விஷ வலை குறித்து தெரிந்து கொள்ளாத நடிகரோ, தான் கட்டிய மனைவி, பெற்ற குழந்தைகள் என அனைவரையும் அம்போ என விட்டுவிட்டு, நடிகையே கதி என இருந்துள்ளார். நடிகை கேட்டார் என்பதற்காக கடல் ஓரத்தில் மட்டும் மூன்று வீடுகளை கட்டி எழுப்பி உள்ளாராம் நடிகர். நடிகரும் நடிகையும் சந்தித்துக் கொள்வது எல்லாம் அங்கேதானாம். ஒருமுறை நடிகரின் மனைவி இருவரையும் கையும் களவுமாக பிடித்து மானத்தை வாங்கி விட்டாராம். ஆனாலும் நடிகை மயக்கிய மயக்கத்தில் நடிகர் மனைவியை உதறிவிட்டு, நடிகையே கதி என்று கிடக்கிறாராம்.
அவுட் ஆஃப் கண்ட்ரோல்: மனைவியும் ஒரு கட்டத்திற்கு மேல் கண்டு கொள்ளாமல், தனது குழந்தைகளை ஆளாக்குவதில் மிகவும் கவனமாக இருந்து விட்டாராம். இதனால் நடிகருக்கும் நடிகைக்கும் இடையிலான ரிலேஷன்ஷிப் கண்ட்ரோல் இல்லாமல் செம்ம ஜோராக போய்க்கொண்டு உள்ளதாம். நடிகை சொன்னால் நடிகர் தான் தொடங்கிய புதுத் தொழிலில் ஏதாவது கமிட்மெண்ட் இருந்தால் கூட, அதை விட்டுவிட்டு நடிகையுடன் நெருக்கமாக இருக்கிறாராம்.