இலங்கையை சேர்ந்த கயல் சீரியல் நடிகை சுபாஷினியின் தற்கொலைக்கு காரணம் என்ன?... வெளிவந்த தகவல்

இலங்கையை சேர்ந்த கயல் சீரியல் நடிகை சுபாஷினியின் தற்கொலைக்கு காரணம் என்ன?... வெளிவந்த தகவல்

கயல் சீரியல்

சன் தொலைக்காட்சியில் கடந்த 2021ம் ஆண்டு சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் முதன்முறையாக ஜோடியாக நடிக்க ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் கயல்.

அப்பாவை இழந்த தனது குடும்பத்திற்கு தூணாக இருந்து எல்லோரின் நலனுக்காக பாடுபடும் ஒரு பெண்ணாக கயல் உள்ளார். அவரது வாழ்க்கையை கூட முதலில் கவனிக்காமல் அண்ணன், தம்பி, தங்கைகள் எல்லோரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என உழைக்கிறார்.

இப்போது கதையில் கயலின் தங்கை ஆனந்தியின் திருமண காட்சிகள் தான் செல்கிறது. இவரது திருமணமும் பெரிய பிரச்சனைகளுக்கு இடையில் நடக்கப்போகிறது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.

காரணம்

நேற்று ஏப்ரல் 7, இலங்கையை சேர்ந்த நடிகை சுபாஷினி சுப்பிரமணியம் பெங்களூரில் தனது கணவர் பிப்பினுடன் வசித்து வந்தார்.

சில திரைப்படங்கள், சன் டிவியின் கயல் சீரியல் வாய்ப்புகள் வந்ததால் சென்னை போரூரை அடுத்த ஐய்யப்பன் தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு (ஏப்ரல் 6) கணவர் பிப்பினுடன் வீடியோ காலில் பேசி உள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது சண்டையாக மாறி உள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நடிகை சுபாஷினி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES