ஜெயிலர் 2 பிந்தாஸ்.. தேவயானி மகள் வெர்ஷனை பாருங்க.. சும்மா கலக்குறாங்க

ஜெயிலர் 2 பிந்தாஸ்.. தேவயானி மகள் வெர்ஷனை பாருங்க.. சும்மா கலக்குறாங்க

சென்னை: கோலிவுட்டில் ஃபேமஸான நடிகைகளில் ஒருவர் தேவயானி. இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களில் மூத்த மகளான இனியா சிறப்பாக பாடல்கள் பாடக்கூடியவர். இளைய மகளான பிரியங்கா இப்போது ரஞ்சன் என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இரண்டு பேருமே தாய் மாதிரி சினிமாவில் பெரிய ரவுண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொட்டாச்சிணுங்கி படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான தேவயானிக்கு அஜித்துக்கு ஜோடியாக நடித்த காதல் கோட்டை திரைப்படம் பெரிய வெற்றியை கொடுத்தது. மேலும் அவர் ஏற்றிருந்த கமலி கதாபாத்திரம் அந்த சமயத்தில் பல இளைஞர்களுக்கு ஃபேவரைட். அப்படத்துக்கு பிறகு அவர் நடித்த பாட்டாளி, சூர்யவம்சம் நினைத்தேன் வந்தாய், ப்ரெண்ட்ஸ் என பல படங்கள் வெற்றி பெற்று அவருக்கென்று தனி மார்க்கெட்டை உருவாக்கியது.

Devayani s Daughter Iniya Dances to Jailer 2 Bindass Song Video Goes Viral

கிளாமர் காண்பிக்காத ஹீரோயின்: தமிழ் சினிமாவில் கிளாமர் காண்பிக்காமல் வெற்றி பெற்ற ஹீரோயின்களில் தேவயானியும் ஒருவர். நதியா, சித்தாரா, ஷாலினி வரிசையில் அவர் அந்தப் பெயரை எடுத்தார்.அதற்காகவே அவரை ஒருதரப்பினர் ரசித்தார்கள். தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளில் நடித்தபோதும் கிளாமருக்கு நோ என்ற கொள்கையில் உறுதியாகவே இருந்தார். அப்படி இருந்ததோடு மட்டுமின்றி அந்த மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜகுமாரனுடன் திருமணம்: தேவயானி பீக்கில் இருந்தபோது ராஜகுமாரன் இயக்கத்தில் நீ வருவாய் என படத்திலும் விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்திலும் நடித்தார். அந்த சமயத்தில் இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் தேவயானி வீட்டில் இந்தக் காதலுக்கு சம்மதம் கிடைக்கவில்லை. இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியே வந்து எதிர்ப்புகளுக்கு மத்தியில் திருமணம் செய்துகொண்டார். பீக்கில் இருந்த தேவயானி இரண்டே படங்கள் இயக்கிய ராஜகுமாரனை திருமணம் செய்திருந்தது பெரிய ஆச்சரியத்தை உண்டு செய்து.

LATEST News

Trending News