கருப்பு ஆடியோ லான்ச் எப்போ? எங்க நடக்கப்போகுது தெரியுமா?.. ஆர்ஜே பாலாஜி கொடுத்த செம ட்விஸ்ட்!

கருப்பு ஆடியோ லான்ச் எப்போ? எங்க நடக்கப்போகுது தெரியுமா?.. ஆர்ஜே பாலாஜி கொடுத்த செம ட்விஸ்ட்!

சென்னை: சூர்யா, த்ரிஷா நடித்துள்ள கருப்பு படம் வரும் மே 14ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அந்த படத்தின் ஆடியோ லான்ச் கங்குவா ஆடியோ லான்ச் நடந்த நேரு ஸ்டேடியத்தில் நடக்குமா? என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஆர்ஜே பாலாஜி இந்த முறை 'கருப்பு' படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளார்.

சூர்யாவின் கருப்பு திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கே வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில பல காரணங்களால் படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு கூட வரமுடியாமல் போனது. கடைசியாக மே 14ம் தேதி ரிலீஸை படக்குழு லாக் செய்துள்ளது.
 

இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக படத்தின் இயக்குநர் ஆர்ஜே பாலாஜியே நடித்துள்ளார். கங்குவா, ரெட்ரோ படங்கள் சரியாக போகாத நிலையில், சூர்யாவுக்கு 'கருப்பு' கம்பேக் படமாக இருக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

கருப்பு இசை வெளியீட்டு விழா தேதி: வரும் ஏப்ரல் 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக ஆர்ஜே பாலாஜி சற்றுமுன் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். சூர்யா, த்ரிஷா, ஆர்ஜே பாலாஜி, சுவாசிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

சாய் அபயங்கர் லைவ் இசை: பிரதீப் ரங்கநாதனின் டியூட், ஷேனு நிகாமின் பல்டி படங்களை தொடர்ந்து சாய் அபயங்கர் இசையில் வெளியாகவுள்ளபடமாக 'கருப்பு' படம் சம்பவம் பண்ண காத்திருக்கிறது. ஏற்கனவே வெளியான காட் மோட், ராத்து ராசன் உள்ளிட்ட பாடல்கள் ஹிட் அடித்துள்ளன. நாங்க நாலு பேரு பாடல் ஆர்ஜே பாலாஜிக்காக உருவாக்கப்பட்ட நிலையில், அந்த பாடல் படத்தில் இடம்பெறாது என ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்.

 

வரும் 26ம் தேதி மதுரையில் கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள நிலையில், சாய் அபயங்கரின் லைவ் இசை கச்சேரி நடைபெறும் என்றும் ஆர்ஜே பாலாஜி அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில், அதிரடியாக படத்தின் இசை வெளியீட்டு விழாவை படக்குழு திட்டமிட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாட காத்திருக்கின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES