இட்லி கடை, தங்க மகனே தேவலாம்.. தனுஷை வைத்து மொக்கை பண்ணிட்டாங்க.. #KaraDisaster
சென்னை: போர் தொழில் இயக்குநராச்சேன்னு நம்பி போனேங்க, இயக்குநர் விக்னேஷ் ராஜா இப்படி மோசம் பண்ணிட்டாரு என 'கர' படத்தை பார்த்த ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் புலம்பித் தள்ளுகின்றனர். மேலும், #KaraDisaster ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜு, கே.எஸ். ரவிகுமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமுடு, பிருத்வி பாண்டியராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'கர' படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் படத்தை ரிலீஸ் செய்த நிலையில், இட்லி கடை படத்தைத் தொடர்ந்து மீண்டும் தனுஷ் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் என ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வருகின்றன. #KaraDisaster: கடந்த ஆண்டு தனுஷ் நடித்த இட்லி கடை, குபேரா, தேரே இஷ்க் மெயின் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. குபேரா திரைப்படத்தில் தனுஷின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு வெளியாகி உள்ள கர படம் தனுஷுக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,
#KaraDisaster ஹாஷ்டேக் டிரெண்டாகும் அளவுக்கு படம் டல் அடித்து காணப்படுகிறது என்கின்றனர். தங்கமகன் தான் கதையே:
தங்கமகன் படத்திலும் தனுஷுக்கு அப்பாவாக கே.எஸ். ரவிக்குமார் நடித்திருப்பார். அவரது பணத்தை ஏமாற்றிவிடுவார்கள். தனுஷ் அதற்காக போராடுவார். அதே போலத்தான் கர படத்திலும் கே.எஸ். ரவிக்குமார் நிலத்தை பேங் ஏமாற்றுகிறது. அதற்காக கொள்ளையடிக்கிறார் தனுஷ் என படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்ததும் ரசிகர்கள் புலம்பித் தள்ளுகின்றனர்.
இட்லி கடை பரவாயில்லை: கர படத்துக்கு தனுஷ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இட்லி கடை படமாவது ஃபீல் குட் படமாக இருந்தது. இந்த படத்திலும் தனுஷ் இட்லி கடை வைக்கவே போராடுகிறார். ஆனால், கடைசி வரை இட்லி கடை வைக்கவில்லை என்று ரசிகைகளும் கலாய்த்து வருகின்றனர்.
அவ்வளவு மோசமில்லை: கர படம் கழுவி ஊற்றும் அளவுக்கு அவ்வளவு மோசமான படமெல்லாம் கிடையாது. ரசிகர்கள் ஓவர் எக்ஸ்பெக்டேஷன் வைத்த நிலையில், படம் அதை பூர்த்தி செய்யாத நிலையில், இப்படி கழுவி ஊத்துறாங்க என இன்னொரு ரசிகர் கூறியுள்ளார். தேர்தல் நேரம் என்பதால் படத்திற்கு பெரிதாக கூட்டமும் முதல் நாளில் வரவில்லை. மே 1 நாளை விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு வசூல் அதிகரித்தால் படம் தப்பிக்கும்.