காதல் கணவரை பிரிந்த சோகம்.. மனஅழுத்தத்தை மறைக்க ஊர் ஊராக சுற்றும் ஹன்சிகா.. பாவம்டா இந்த பொண்ணு!
சென்னை : சினிமாவில் ஹன்சிகா போல்டான ஜாலியான ரோலில் நடித்தாலும் அவருடைய மனது எவ்வளவு மென்மையானது, சென்சிடிவ் ஆனவர் என்பதை திருமணத்திற்கு பின் வெளியான 'ஹன்சிகாஸ் லவ் ஷாதி ட்ராமா'வில் வீடியோவை பார்த்தாலே தெரிந்து இருக்கும். அதில் காதல் கிசு கிசு குறித்தும், தன்னை சுற்றி வந்த விமர்சனங்களால் தான் எவ்வளவு மன வேதனை அடைந்தேன் என கண்ணீருடன் பேசி இருந்தார் ஹன்சிகா. ஆனால் தற்போது கணவரை விட்டு விவாகரத்து பெற்று பிரிந்திருக்கும் நிலையில் ஊர் ஊராக ஜாலியாக ட்ரிப் செல்வது போல இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கிய ஹன்சிகா மோத்வானி தமிழில் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்தார். இந்த மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படம் ஹீரோவாக நடித்த உதயநிதி ஸ்டாலின் அடிக்கடி 'சின்ன குஷ்பு' என அன்பாக அழைத்திருப்பார். அதே பின்னாலில் அவரது அடைமொழியாக மாறியது. அந்த பெயருக்கு ஏற்றார் போல கொழு கொழு என அழகாக இருந்தார் ஹன்சிகா மோத்வானி.

இன்ஸ்டாகிராம் போஸ்ட்: குறுகிய காலத்திலேயே அடுத்தடுத் படங்களில் நடித்து தமிழ், தெலுங்கு என அனைத்து மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி, கடந்த 2022 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பரான சோஹேல் கதூரியா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ஜெய்ப்பூரில் கோலாகலமாக நடைபெற்றது. ஆனால், திருமணமான சில ஆண்டுகளிலேயே இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் செய்திகள் பரவினார். ஆனால், அது குறித்து எந்தவிதமான கருத்துகளையும் ஹன்சிகா மோத்வானி தெரிவிக்காமல் இருந்த நிலையில் கடந்த மாதம் ஹன்சிகா மோத்வானி கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றதாக செய்திகள் வெளியானது.
ஹன்சிகா மோத்வானி: இந்நிலையில் ஹன்சிகா மோத்வானி தற்போது இன்ஸ்டாகிராமில் ஜாலியாக வெளிநாட்டுக்கு டூர் சென்றிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். அதில் தோழி உடன் கவலையை மறந்து அரட்டை அடிப்ப,து ஜாலியாக சரிப்பதுபோல இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த சில ரசிகர்கள் லைக்குகளை குவித்து வந்தாலும், ஒரு சில ரசிகர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்காக தான் ஹன்சிகா இப்படி டூர் சென்று இருப்பதாகவும். விரைவில் ஹன்சிகா இந்த மனநிலையில் இருந்து மீண்டு சினிமாவில் கவனம் செலுத்த வேண்டும் என இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஹன்சிகா லவ் ஷாதி டிராமாவில் பேசியதை அவரது ரசிகர்கள் நினைவுகூர்ந்து அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.