Tamannaah Bhatia : ஒரு முறை மட்டுமல்ல பல முறை வருவது தான் காதல்.. தமன்னா பேட்டி!

Tamannaah Bhatia : ஒரு முறை மட்டுமல்ல பல முறை வருவது தான் காதல்.. தமன்னா பேட்டி!

சென்னை: நடிகை தமன்னா பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் 'தி லஸ்ட் ஸ்டோரிஸ்' என்ற படத்தில் நடித்த போது இருவரும் காதலித்தனர். காதலர்களாக பல இடங்களில் சுற்றித்திரிந்த இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். தற்போது விஜய் வர்மா, பாடகி ஆலியா குரோஷியுடன் பழகி வருகிறார். இந்நிலையில், தமன்னா காதல் மற்றும் உறவு குறித்து வெளிப்படையாக பகிர்ந்த கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.

காதல் பல முறை வரும்: அதில், இன்றைய காலத்தில் காதல் மற்றும் உறவு என்றால் என்ன என்பதில் பலருக்கும் குழப்பம் நிலவுகிறது. காதலில் எதிர்ப்புகள் அதிகரிக்கும் போது, அது ஒரு வகையில் வியாபாரமாக மாறும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. உண்மையான காதல் என்பது ஒருவரை கட்டுப்படுத்துவது அல்ல, அவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்குவதில் தான் உள்ளது. நம் எண்ணங்களை மற்றொருவரின் மீது திணிப்பதன் மூலம் காதலை நிரூபிக்க முடியாது. காதல் என்பது வாழ்க்கையில் ஒரே முறை மட்டுமே வருவது அல்ல; அது பலமுறை ஏற்படக்கூடிய ஒரு உணர்ச்சி என்றும் தெரிவித்தார். அந்த உணர்ச்சி வெளிப்புற காரணங்களால் அல்ல, நம்முள் இருந்து உருவாகும் ஒன்று எனவும் தமன்னா அழகாக விளக்கினார். தமன்னாவின் இந்த கருத்துகள், இன்றைய தலைமுறையினருக்கு காதலை புதிய கோணத்தில் சிந்திக்க வைக்கும் வகையில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

தமன்னா நடித்துவரும் படம்: நடிகை தமன்னா 'ஜெயிலர்' படத்தில் 'காவலையா' பாடலில் தனது நடனத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தமன்னா, இந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'ஸ்ட்ரீ 2' படத்தில் 'ஆஜ் கி ராத்' பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இந்தப் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று, சமூக வலைதளங்களில் வைரலானது. கடைசியாக 2024ம் ஆண்டு 'அரண்மனை 4' படத்தில் நடித்தார். V. Shantaram , Bole Chudiyan, ஆகிய படத்தில் நடித்து வருகிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES