பால் டப்பாவுடன் த்ரிஷா.. நைட் நேரத்துல ஊஞ்சலில் என்ன பண்றாரு பாருங்க.. வெயிட்டான சம்பவம் லோடிங்!

பால் டப்பாவுடன் த்ரிஷா.. நைட் நேரத்துல ஊஞ்சலில் என்ன பண்றாரு பாருங்க.. வெயிட்டான சம்பவம் லோடிங்!

சென்னை: நடிகர் சூர்யாவுடன் நடித்த 'கருப்பு' படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அந்த படத்தின் எந்தவொரு புரமோஷன் நிகழ்ச்சிக்கும் த்ரிஷாவை படக்குழு அழைக்கவில்லை என த்ரிஷாவே வெளிப்படுத்தியது பகீர் கிளப்பியது.

த்ரிஷாவின் பிறந்தநாளுக்கு கூட கருப்பு படக்குழு போஸ்டர் வெளியிட்டாலும் நடிகர் சூர்யா ஒரு வாழ்த்துக் கூட சோஷியல் மீடியாவில் தெரிவிக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

கருப்பு படத்துக்கு மேல் த்ரிஷா சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும் த்ரிஷா புதிதாக எந்தவொரு படங்களிலும் ஒப்பந்தம் ஆகவில்லை என பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், தற்போது பால் டப்பாவுடன் த்ரிஷா இணைந்து நடனமாடிய வீடியோ பாடல் வெளியானது.

சினிமாவுக்கு முழுக்குப் போடுறாரா த்ரிஷா?: தவெக தலைவர் விஜய்யுடன் த்ரிஷாவை இணைத்து வைத்து பல பேச்சுக்கள் உலா வருகின்றன. திருப்பதிக்கு பிறந்தநாள் அன்று சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு விஜய் வீட்டுக்குச் சென்ற த்ரிஷா அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு கிளம்பினார். கருப்பு படத்துக்குப் பிறகு புதிதாக எந்தவொரு படத்திலும் த்ரிஷா கமிட் ஆகவில்லை என்றும் அவர் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும் வதந்திகள் கிளம்பின.

பால் டப்பாவுடன் த்ரிஷா: ஆனால், அதெல்லாம் வெறும் என்பதை த்ரிஷா நிரூபிக்கும் விதமாக தற்போது பால் டப்பாவுடன் இணைந்து மியூசிக் வீடியோ ஒன்றில் த்ரிஷா நடித்துள்ளார். மேலும், பால் டப்பாவுடன் இணைந்து பாடல் காட்சியில் நடிக்கும் ஒரு வீடியோவை பால் டப்பா டீம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஊஞ்சலாடும் த்ரிஷா: விஜய்யுடன் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி உள்ளிட்ட படங்களில் நடித்த த்ரிஷா சிம்புவுடன் இணைந்து விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்து மிகப்பெரிய கம்பேக் கொடுத்தார். விஜய் சேதுபதியுடன் 96 படமும் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத் தந்தது. மணிரத்னம் இயக்கத்தில் குந்தவையாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார். மீண்டும் விஜய்யுடன் லியோ படத்தில் ஹீரோயினாக நடித்த த்ரிஷா, கோட் படத்தில் மட்ட பாடலுக்கு மஞ்சள் சேலை அணிந்து வந்து நடனமாடினார்.



ஆல்பம் பாடலில் த்ரிஷா: அஜித்துடன் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்த த்ரிஷா, சூர்யாவுடன் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், திடீரென தற்போது பால் டப்பாவுடன் இணைந்து ஒரு இசை ஆல்பத்தில் நடித்து வருகிறார் என்கின்றனர். ஊஞ்சலில் பால் டப்பாவுடன் த்ரிஷா ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது. Psilovibin என்கிற வீடியோ பாடலில் த்ரிஷா மற்றும் பால் டப்பா இணைந்து நடனமாடியுள்ளனர். அந்த வீடியோ பாடல் தற்போது தீயாக பரவி வருகிறது.

 

LATEST News

Trending News

HOT GALLERIES