அதற்கு சரியான ஆள் இல்லைனு நினைத்த சாய் பல்லவி.. என்ன மேடம் நீங்க இப்படி நினைச்சுருக்கிங்களே?
சென்னை: நடிகை சாய் பல்லவி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் பிஸியாக நடித்துவருகிறார். பாலிவுட்டில் அவர் நடித்துவரும் ராமாயணம் திரைப்படம் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகிவருகிறது. அதற்கும் முன்னதாகவே அவர் நடிப்பில் ஏக் தின் திரைப்படம் வெளியாகிவிட்டது. அதில் சாய் பல்லவியும், அமீர் கான் மகன் ஜுனைத் கானும் நடித்திருந்தார்கள். ஆனால் அந்தப் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் பல்லவி கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
பிரேமம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான சாய் பல்லவி முதல் படத்திலேயே தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸை அள்ளினார். ரொம்பவே கேஷுவலான காஸ்ட்யூமில் எதார்த்தமான நடிகையாக ஜொலித்தார். அப்படத்தின் வெற்றிக்கு அடுத்தடுத்து தனக்கு கிடைத்த வாய்ப்புகளை தரமாக பயன்படுத்திக்கொண்டார். அதன் காரணமாக அறிமுகமான சில காலத்திலேயே குறிப்பிட்ட அளவுக்கான ரசிகர் வட்டத்தையும் பெருக்கிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் சாய் பல்லவி: மலையாளத்துக்கு பிறகு தமிழில் மாரி 2 திரைப்படத்தில் அறிமுகமானார். அப்படம் தோல்வியடைந்தாலும் வழக்கம்போல் தனது பவர்ஃபுல்லான ஃபெர்பார்மையும், நடனத்தையும் அதில் வெளிப்படுத்தியிருந்தார். அதனையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்தில் நடித்திருந்தார். அதுவும் சொல்லிக்கொள்ளும்படியான வரவேற்பை பெறவில்லை. இப்படி தொடர்ந்து கோலிவுட்டில் சறுக்கிக்கொண்டிருந்த அவருக்கு கார்கி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டை கொடுத்தது.
பாலிவுட்டுக்கும் சென்ற பல்லவி: மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளை தொடர்ந்து தற்போது பாலிவுட்டுக்கும் சென்றிருக்கிறார். முதலில் அவர் ராமாயணம் படத்தில்தான் அறிமுகம் ஆனார். ஆனால் அது ரிலீஸாக தாமதமாகியிருக்கிறது. அதற்கு முன்னதாகவே ஏக் தின் என்ற படம் மே ஒன்றாம் தேதி வெளியானது. அதில் அமீர் கான் மகன் ஜுனைத் கான் ஹீரோவாக நடித்திருக்கிறார். மே ஒன்றாம் தேதி வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றிருக்கிறது.
சாய் பல்லவி பேச்சு: இந்நிலையில் நிகழ்வு ஒன்றில் பேசிய சாய் பல்லவி, "பொதுவாக நான் ஒரு படத்தை அது எவ்வளவு பெரிய படம் என்பதை வைத்து தேர்வு செய்யமாட்டேன். ரொம்ப சீரியஸான படங்களில்தான் நடித்திருக்கிறேன். அதனால் மென்மையான படத்தில் நடிக்க விரும்பினேன். அந்த நேரத்தில்தான் ஏக் தின் வாய்ப்பு வந்தது. Before Sunrise திரைப்படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் . அது மாதிரியே இருக்கிறதே என்று எனக்கு தோன்றியது. அதனால்தான் நடிக்க ஒத்துக்கொண்டேன்.
முதலில் நினைத்தேன்: அமீர் கானின் சினிமா பயணத்தை நான் தொடர்ந்து கவனித்துவருகிறேன். அவர் இந்தப் படத்தை தயாரித்ததும் நான் நடிப்பதற்கு ஒத்துக்கொண்ட காரணங்களில் ஒன்று. ஏக் தின் பட ஹீரோயினுக்கு நான் சரியாக வரமாட்டேன் என்றுதான் முதலில் நினைத்திருந்தார். ஏக் தின் பிரிமீயர் ஷோ முடிந்த பிறகும்கூட அமீரிடம் இதை சொன்னேன்" என்றிருக்கிறார்.