அய்யோ ஜஸ்ட் மிஸ்.. இல்லைனா பேண்ட் இருந்திருக்காது.. அட்லீக்கு ஏற்பட்ட நிலைமை

அய்யோ ஜஸ்ட் மிஸ்.. இல்லைனா பேண்ட் இருந்திருக்காது.. அட்லீக்கு ஏற்பட்ட நிலைமை

சென்னை: அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் ராக்கா திரைப்படத்தின் பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. இந்திய சினிமாவில் கண்டிப்பாக இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கையில் இயக்குநரும்,ஹீரோவும் இருக்கிறார்கள். இந்நிலையில் அட்லீயின் வீடியோ சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.

ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து விஜய்யை வைத்து வரிசையாக மூன்று திரைப்படங்கள் இயக்கினார். அவற்றில் பிகில் திரைப்படம் மட்டும்தான் தோல்வியை சந்தித்தது. ஆனால் அந்த தோல்வி அவரது மார்க்கெட்டை அசைத்து பார்க்கும் என்றுதான் எல்லோராலும் கணிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரோ அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்படி ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. மொத்தம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்தது.

Atlee s Viral Video Creates Buzz Online After Unexpected Incident Near His Luxury Car

ஷாருக் குட் புக்கில்: அந்தப் படத்தில் நடித்து நடிகை நயன்தாராவும் பாலிவுட்டுக்கு சென்றார். பல தென்னிந்திய நட்சத்திரங்கள் அப்படத்தில் வேலை பார்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அட்லீயின் வொர்க்கிங் ஸ்டைல்,அவரது அணுகுமுறை எல்லாம் ஷாருக்கானை ரொம்பவே கவர்ந்துவிட்டதாகவும்; எனவே தன்னுடைய குட் புக் லிஸ்ட்டில் இயக்குநரையும் சேர்த்துவிட்டார் என்று பாலிவுட் தகவல்கள் வருகின்றன. மேலும் ஷாருக்கை வைத்தே இன்னொரு படத்தை இயக்கவிருக்கிறார் என்றும் கூறப்பட்டது.

அல்லு அர்ஜுனுடன் கூட்டணி: ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தென்னிந்திய சினிமாவுக்கு மீண்டும் வந்திருக்கிறார். அதன்படி அல்லு அர்ஜுன் நடிப்பில் ராக்கா திரைப்படத்தை இயக்கிவருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கிவருகிறது. இதில் தீபிகா படுகோனேவும் முக்கியமான ரோலில் நடிக்கிறார். இவர் தவிர்த்து மிருணாள் தாகூர், ஜான்வி கபூர் உள்ளிட்டோரையும் படத்தில் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும் பட்சிகள் கூறுகின்றன.

வீட்டில் விசேஷம்: இதற்கிடையே அட்லீக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கிறார். அவருக்கு வீர் என்று பெயர். அடுத்ததாகவும் பிரியா கர்ப்பமானார். அவருக்கு கடந்த மாதத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஒரு மகனுக்கும், ஒரு மகளுக்கும் தந்தை, தாய் ஆகியிருப்பதை நினைத்து இரண்டு பேருமே சந்தோஷமாக இருக்கிறார்கள். மகள் பிறந்த உற்சாகத்தோடு ராக்கா படத்தில் கூடுதல் பலத்தோடு வேலை செய்துவருகிறார் என்று படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து குரல்கள் கேட்கின்றன.

ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் அட்லீ தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது தன்னுடைய கூப்பர் காரிலிருந்து இறங்கி சென்றார். அப்போது அருகே இருக்கும் காரில் அட்லீயின் பேண்ட் சிக்கிக்கொண்டது. நல்வாய்ப்பாக அதை பார்த்து சுதாரித்துக்கொண்ட அவர்; தன்னுடைய பேண்ட் கிழியாமல் லாவகமாக எடுத்துவிட்டார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், நல்ல வேளை அசம்பாவிதமாக எதுவும் நடக்கவில்லை என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

 

LATEST News

Trending News

HOT GALLERIES