மாமன்னன் பட நடிகை ரவீனா ரவிக்கு டும்டும்டும்.. கணவர் யாருனு தெரியுமா?

மாமன்னன் பட நடிகை ரவீனா ரவிக்கு டும்டும்டும்.. கணவர் யாருனு தெரியுமா?

சென்னை: பிரபல டப்பிங் கலைஞரும் மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகை ரவீனா ரவி தனது காதலை கரம்பிடித்துள்ளார். திருமண வாழ்க்கையில் இணைந்து இருக்கும் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஊட்டி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சிறு வயதிலேயே சினிமாவுக்கு வந்தவர் தான் ரவீனா ரவி. அதன்பின் ஒரு சில திரை 2012ம் ஆண்டு வெளியான சாட்டை படத்தில் டப்பிங் கொடுத்து டப்பிங் கலைஞராக தமிழ் சினிமாவில் அறிமுகமான ரவீனா ரவி, அமைரா தஸ்தூர், காஜல் அகர்வால், எமி ஜாக்சன், மடோனா செபாஸ்டியன், மாளவிகா மோகனன், ராஷி கன்னா மற்றும் தீபிகா படுகோன் என பல முன்னணி நடிகைகளுக்கு இவர் டப்பிங் பேசி உள்ளார்.

நடிகை ரவீனா ரவி: டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டையும் தாண்டி ஒரு கிடாயின் கருணை மனு படத்தில் நடிக்க ஆரம்பித்த ரவீனா ரவி ராக்கி, வீரமே வாகை சூடும், லவ் டுடே, மாமன்னன் மற்றும் வட்டார வழக்கு என பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவருக்கு பெயரை பெற்று தந்த படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் பகத் ஃபாசில் மனைவியாக நடித்து பலரையும் கவர்ந்தார்.

காதல் திருமணம்: இந்நிலையில் நடிகை ரவீனா ரவி தனது காதலை கரம்பிடித்துள்ளார்.' 'வாலாட்டி' எனும் செல்லப்பிராணியான நாய் படத்தை இயக்கிய மலையாள இயக்குநர் தேவன் ஜெயக்குமாரை காதலித்து வருவதாக நடிகை ரவீனா ரவி கடந்த ஆண்டு அறிவித்து இருந்த நிலையில், தற்போது அவர்களின் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகும் ரவீனா ரவி தொடர்ந்து படங்களில் நடிப்பார் என கூறப்பட்டுள்ளது. ரவீனா ரவியின் அம்மாவான ஸ்ரீஜா ரவி 1,500க்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். அதோடு பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES