விஜய் முதல் துல்கர் சல்மான் வரை.. ஃபுல் ஸ்பீடில் பூஜா ஹெக்டே.. கடகடவென ரெடியாகும் DQ41

விஜய் முதல் துல்கர் சல்மான் வரை.. ஃபுல் ஸ்பீடில் பூஜா ஹெக்டே.. கடகடவென ரெடியாகும் DQ41

ஹைதராபாத்: தமிழில் விஜய்யுடன் ஜன நாயகன் படத்தில் நடித்து முடித்த பூஜா ஹெக்டே அந்த படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். இந்தியில் வருண் தவான் உடன் நடித்துள்ள Hai Jawani Toh Ishq Hona Hai. திரைப்படம் வரும் ஜூன் 5ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், துல்கர் சல்மான் உடன் பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கும் #DQ41 திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்கத்தில், சுதாகர் செருகூரி தலைமையிலான எஸ்எல்வி சினிமாஸ் தயாரிப்பில் #SLV10 எனும் உருவாகும் பான் இந்தியா திரைப்படத்தின் முக்கிய படப்பிடிப்பு கட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இது எஸ்எல்வி சினிமாஸின் பத்தாவது படைப்பாகும்.

துல்கர் சல்மான் தற்போது மும்முரமாக நடித்து வரும் #DQ41 படத்தில், பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மனித உணர்வுகளும், காதலும் கலந்த இனிமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகி வருகிறது. திரையில் இவர்களின் முதல் கூட்டணி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

பனிமூட்டம் சூழ்ந்த மலைப்பகுதிகளில் நடைபெற்ற இதன் படப்பிடிப்பு புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. குளிர்கால உடைகளில் துல்கர் சல்மான் இயல்பான கவர்ச்சியுடன் தோன்ற, பூஜா ஹெக்டே தனது தனித்துவமான ஸ்டைலில் கவர்ச்சியாக அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். இந்த காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

Dulquer Salman and Pooja Hegde new movie DQ41 getting ready in a superb way

வெளியான புகைப்படங்கள் வழக்கமான போஸ் ஸ்டில்களாக இல்லாமல், படப்பிடிப்புத்தளத்தின் இயல்பான தருணங்களை வெளிப்படுத்துகின்றன. ஒரு படத்தில், மழைச்சாரலில் குடைகளுடன் குழுவினருடன் இணைந்து துல்கரும் பூஜாவும் சிரிப்பதைக் காணமுடிகிறது. இது அவர்களின் இயல்பான தோற்றத்தை படம்பிடித்துள்ளது.

மற்றொரு புகைப்படத்தில், பயணப் பைகள், கயிற்றுப் பாலம் மற்றும் மலைப் பகுதி பிரார்த்தனைக் கொடிகள் சேர்ந்து ஒரு பயணத்தின் உணர்வைத் தருகின்றன. அடர்ந்த காட்டில் உள்ள கோயிலின் முன் முழு படக்குழுவும் ஒன்றாக நிற்கும் காட்சியும் வெளியானது. துல்கர் சல்மான் - பூஜா ஹெக்டே இணையின் இயல்பான நெருக்கம், படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

ஒளிப்பதிவாளர் அனய் ஓம் கோஸ்வாமி இயற்கை வெளிச்சத்தைப் பயன்படுத்தி காட்சியழகு கூட்டியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை, மற்றும் அவினாஷ் கொல்லா உருவாக்கிய காட்சியமைப்பு ஆகியவை இணைந்து ஒரு நெருக்கமான, அழகான, உணர்வுப்பூர்வமான உலகத்தை திரையில் படைக்கின்றன.

பிரம்மாண்டமான 'பான் இந்தியா' வெளியீடாக உருவாகும் இந்த திரைப்படம், தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

LATEST News

Trending News

HOT GALLERIES