நெகட்டிவ் விமர்சனங்களால என் படம் நாசமா போச்சு.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. So Sad!
சென்னை: காத்துவாக்குல ரெண்டு காதல் படத்துக்குப் பிறகு பல நெகட்டிவிட்டிகளை சந்தித்து அஜித் குமார் படத்தை இயக்கும் அரிய வாய்ப்பையும் நழுவ விட்ட இயக்குநர் விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து ஆரம்பித்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி டைட்டில் முதல் தயாரிப்பு வரை பல சிக்கல்களை சந்தித்து ஒரு வழியாக ஏப்ரல் மாதம் வெளியான நிலையில், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
நெகட்டிவ் விமர்சனங்கள் தான் தனது படம் தோல்வியை சந்தித்தற்கு முக்கிய காரணம் என நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். மேலும், ஓடிடியில் வெளியாகிப் பெரும் பாசிட்டிவ் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், "ஆன்லைனில் பரவிய அதீத நெகட்டிவிட்டி காரணமாக பலரும் திரையரங்குகளில் இந்தப் படத்தைப் பார்க்கத் தவறிவிட்டதாக எனக்கு மெசேஜ் செய்துள்ளனர்" என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளது தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.
நெகட்டிவ் விமர்சனங்களால் என் படம் போச்சு: விமர்சகர்களைக் கடுமையாகச் சாடிய அவர், விமர்சனங்கள் "புத்திசாலித்தனத்தையோ அல்லது மேன்மையையோ வெளிப்படுத்தும் நோக்கில் எழுதப்படுகின்றன; ஒரு திரைப்படத்தை விமர்சிப்பதை விட இதுவே அதிகம் - அவை பார்வையாளர்களைப் படத்திற்கு வாய்ப்பு கொடுக்க விடாமல் தடுத்து, லட்சிய திரைப்படத் தயாரிப்பாளர்களின் கனவுகளை நசுக்கலாம்" என்று குறிப்பிட்டார்.
LIK படத்தின் வசூல் தீர்ப்பை இன்னும் தன்னால் ஏற்க முடியவில்லை எனத் தெரிவித்த விக்னேஷ் சிவன், "முதல் வார இறுதியில் பெரும் நம்பிக்கை அளித்த பாக்ஸ் ஆபீஸ் பிறகு, அப்படியே நிலைமை தலைகீழாக மாறிவிட்டது" என்பதைக் காண்பது வேதனை அளித்தது என்றார். ஒரு நேர்மையான தமிழ்ப் படமாக, "வித்தியாசமாகவும், அசல் தன்மையுடனும் வெளிவர முயன்றதற்கு, பார்வையாளர்களிடம் இருந்து இன்னும் சற்றுத் தாராள மனப்பான்மை தேவைப்பட்டது" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
விக்னேஷ் சிவன் வருத்தம்: திரைப்படம் உருவானதில் உள்ள சவால்களைப் பகிர்ந்த அவர், "இதுபோன்ற ஒரு படத்தைப் படமாக்குவதில் உள்ள போராட்டங்களை பலர் பார்ப்பதில்லை. இதை உருவாக்குவது கடினம், வெளியிடுவது அதனினும் கடினம், சவால்களை எல்லாம் கடந்து, இது இப்படி முடிவடைவதைக் காண்பது வேதனையானது" என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
2040ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டுள்ள LIK படத்தின் கதை, சூரியன் (எஸ்.ஜே. சூர்யா) உருவாக்கிய LIK செயலி மற்றும் அதன் 'காதல் மதிப்பெண்' (Love Score) பற்றியது. அது காதலர்களின் உறவுகளைக் கண்காணிக்கிறது. வாசு (பிரதீப் ரங்கநாதன்) - தீமா (க்ரித்தி ஷெட்டி) உறவில் விரிசலைக் காட்ட, சூரியன் உருவாக்கிய ஆப் தான் பெஸ்ட் என்பதை நிரூபிக்க சூழ்ச்சிகளை செய்ய அதை ஹீரோ எப்படி முறியடித்து காதலை எல்லாம் எந்தவொரு செயலியும் கணிக்க முடியாது என்கிற கதையை உருவாக்கியிருந்தார்.
அவங்களை நம்பாதீங்க: தியேட்டரில் 66 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக படக்குழு அறிவித்தது. நயன்தாரா தயாரிப்பில் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் வெளியான இந்த படம் அசால்ட்டாக 200 கோடி அடிக்கும் என நம்பிய விக்னேஷ் சிவனின் கனவு நசுங்க காரணமே நெகட்டிவ் விமர்சனங்கள் தான் என தனது வேதனையை பதிவு செய்துள்ளார்.
விக்னேஷ் சிவனுக்கு ஒன்றை மட்டுமே சொல்லிக் கொள்ள விரும்புகிறோம், ஓடிடியில் படத்தை பார்த்துவிட்டு இந்த படத்தை தியேட்டரில் மிஸ் செய்துவிட்டேன் என்று சொல்பவர்களை என்றுமே நம்பாதீங்க, அவர்கள் ஓடிடிக்கு பழக்கப்பட்டு ரொம்ப காலம் ஆகிவிட்டது. தியேட்டருக்குச் சென்று விமர்சனங்களை கடந்து படம் பார்க்கும் ரசிகர்கள் தான் படங்களை வெற்றிப் பெற வைக்கின்றனர் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.