4 years of Vikram: லோகேஷ் - கமல் கூட்டணியில் பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த விக்ரம் படத்தின் மொத்த வசூல் விவரம்

4 years of Vikram: லோகேஷ் - கமல் கூட்டணியில் பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த விக்ரம் படத்தின் மொத்த வசூல் விவரம்

விக்ரம்

உலகநாயகன் கமல் நடிப்பில் உருவாகி 2022-ஆம் ஆண்டு பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த திரைப்படம் விக்ரம். இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க, விஜய் சேதுபதி, பகத் பாசில், காயத்ரி, காளிதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும், ரோலெக்ஸ் என்கிற சிறப்பு தோற்றத்தில் மிரட்டலாக களமிறங்கி இருந்தார் நடிகர் சூர்யா. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

2022-ல் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இப்படத்திலிருந்துதான் LCU-வும் தொடங்கியது. இந்த யூனிவெர்சில் அடுத்ததாக பென்ஸ் திரைப்படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

4 years of Vikram

இந்த நிலையில், இன்றுடன் (ஜூன் 3) விக்ரம் திரைப்படம் வெளிவந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனை கொண்டாடும் வகையில் 4 years of Vikram என்கிற ஹாஸ்டேக்கை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள். நான்கு வருடங்களை கடந்திருக்கும் விக்ரம் திரைப்படம் மொத்தமாக செய்த வசூல் எவ்வளவு என்பது குறித்துத்தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

 

4 years of Vikram: லோகேஷ் - கமல் கூட்டணியில் பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த விக்ரம் படத்தின் மொத்த வசூல் விவரம் | 4 Years Of Vikram And Box Office Collection

லோகேஷ் - கமல் கூட்டணியில் உருவாகி பிரம்மாண்டமாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் உலகளவில் ரூ. 435 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்து சாதனை படைத்தது. கமல் ஹாசனின் திரை வாழ்க்கையில் அவர் ஹீரோவாக நடித்த திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த படமும் இதுவே ஆகும்.

LATEST News

Trending News

HOT GALLERIES