நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத்

நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத்

பரீனா ஆசாத்

பரீனா ஆசாத், தொகுப்பாளினியாக தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமானவர்.

சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சின்னத்திரையில் உள்ள டாப் 5 சீரியல்களில் ஒன்றாக இருந்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா. இந்த தொடருக்கு என்று தனி ரசிகர்கள் வட்டாரம் இருந்தது. இதில் மோசமான வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் பரீனா ஆசாத்.

 

இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவருக்கு திருமணம் நடந்தது, பின் அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. பரீனா ஆசாத் பாரதி கண்ணம்மா பிறகு சில சீரியல்கள் நடித்தாலும் பெரிய அளவில் தெரியவில்லை.

பேட்டி

இப்போது தனியார் நிகழ்ச்சிகள், பட நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது, போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாக இருக்கும் பரீனா ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர் பேசும்போது, நான் பிறந்தது இஸ்லாம் மதம் என்றாலும் நாங்கள் அவ்வளவாக அதில் ஈடுபட்டது கிடையாது, எனது பெற்றோர்களும் எல்லாமே சாதாரணமாக எடுத்துக் கொள்பவர்கள் தான்.

ஒருமுறை குட்டி உடையில் எனது போட்டோ ஒரு பத்திரிக்கையில் வெளியாக எனது மாமா அம்மாவுக்கு போன் செய்து என்ன உன் பொண்ணு இப்படியெல்லாம் என கேட்டுள்ளார், அதை பெரிய பிரச்சனையாக பேசினார்கள்.

ஆனால் என் அம்மா-அப்பா இல்லை அவளுக்கு அதுதான் பிடித்துள்ளது, அவள் இஷ்டப்பட்டு தான் செய்துள்ளார் என எனக்கு பெரிய ஆதரவு கொடுத்துள்ளார்கள் என கூறியுள்ளார். 

LATEST News

Trending News