தனுஷின் 'OM' திரைப்படத்தில் இணைந்த பாலிவுட் நட்சத்திரம்.. யார் தெரியுமா? இதோ பாருங்க

தனுஷின் 'OM' திரைப்படத்தில் இணைந்த பாலிவுட் நட்சத்திரம்.. யார் தெரியுமா? இதோ பாருங்க

OM

அமரன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'OM'. இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரம் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியானது. இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்தது.

பாலிவுட் நட்சத்திரம்

இந்த நிலையில், தற்போது OM திரைப்படத்தின் அடுத்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், OM திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் நஸீருதீன் ஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என அறிவித்துள்ளனர்.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் நஸீருதீன் ஷா இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். நடிகர் நஸீருதீன் ஷா கிட்டத்தட்ட 26 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்கிறார். கடைசியாக ஹே ராம் திரைப்படத்தில் காந்தியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES