சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் மரணம்! அதிர்ச்சியில் சின்னத்திரை ரசிகர்கள்
திருமதி செல்வம், சிறகடிக்க ஆசை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கும் நடிகர் ஜெயமணி திடீர் மரணம் அடைந்திருப்பது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் மலேசியா மாமா ரோலில் அவர் நடித்து இருந்தார். ஜெயமணி நடிப்பை தாண்டி சுமார் 40 சீரியல்களை இயக்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மரணம்
நடிகர் ஜெயமணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர்.
மேலும் ரசிகர்களும் உருக்கமாக சமூக வலைத்தளங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
