நெகட்டிவ்வாக பேசுபவர்களுக்கு சாட்டையடி கொடுத்த ரச்சிதா மகாலட்சுமி.. ஓபன் டாக்

நெகட்டிவ்வாக பேசுபவர்களுக்கு சாட்டையடி கொடுத்த ரச்சிதா மகாலட்சுமி.. ஓபன் டாக்

சென்னை: நடிகை ரச்சிதா மகாலட்சுமி சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு வெள்ளித்திரையில் ஜொலிப்பவர். அவரது நடிப்பில் கடைசியாக 99/66 திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படம் சுமாரான வரவேற்பே பெற்றது. அடுத்ததாக மெய் நிகரி, யூ ஆர் நெக்ஸ்ட் உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. இந்நிலையில் அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷயம் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சின்னத்திரையில் பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. சீரியலில் பிஸியாக இருந்தபோதே தன்னுடன் நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கை நீண்ட வருடங்கள் நீடிக்கவில்லை. தங்களுக்குள் தொடர்ந்து செட் ஆகாததால்; இரண்டு பேரும் பிரிந்துவிட்டார்கள். எப்படியாவது ரச்சிதாவோடு சேர்ந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தினேஷ் செயல்பட்டாலும்; ரச்சிதா தரப்பிலிருந்து எந்த ஒத்துழைப்பும் வரவில்லை. பிரிந்தே தீருவது என்பதில் உறுதியாக நின்றார் நடிகை.

Rachitha Mahalakshmi Opens Up About Negativity I Take Only What I Need From Life

பிக்பாஸ் ரச்சிதா: சின்னத்திரையில் பிரபலமாக இருந்ததை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பு கிடைத்தது. அதில் தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக விளையாடினார். இடையே ராபர்ட் மாஸ்டர் அவரிடம் நெருங்கி பழக முயல; இவர் ரொம்பவே நாகரீகமாக அதனை கட்டுக்குள் வைத்திருந்தார். அது ரசிகர்களிடம் பெரிய ரெஸ்பான்ஸை பெற்றுக்கொடுத்தது. இருப்பினும் பாதியிலேயே எவிக்ட் செய்யப்பட்டார். அங்கிருந்து வெளியே வந்த பிறகு திரைப்படங்களில் பிஸியாகிவிட்டார்.

ஓவர் கிளாமர்: அந்தவகையில் ஃபயர் திரைப்படத்தி நடித்தார். அதில் ஒரு பாடலில் அளவுக்கு மீறிய கிளாமர் காண்பிக்க திரை தீ பற்றி கொண்டது. அனைவருமே ஆச்சரியத்தோடு ரச்சிதாவை பார்த்தார்கள். ஏனெனில் சீரியலில் இருக்கும்போது அவர் சின்னத்திரை சாவித்திரி என்று கொண்டாடப்பட்டவர். அவரா இப்படி ஒரு கிளாமர் அவதாரம் எடுத்திருக்கிறார் என வாயடைத்து போனார்கள். இன்னும் சிலரோ, பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார் போல என்று விமர்சிக்கவும் செய்தார். அவர் அதற்கும் தகுந்த பதிலடியை கொடுத்திருந்தார்.
கமிட்டாகும் ரச்சிதா: அந்தப் படத்துக்கு பிறகு 99/66 திரைப்படத்தில் நடித்தார். அண்மையில் வெளியான அந்தப் படம் வந்ததும் தெரியவில்லை; போனதும் தெரியவில்லை. அடுத்தடுத்து அவர் படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதற்கிடையே சிங்கிளாக இருக்கும் அவர் எப்போது திருமணம் செய்துகொள்வார் என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. அவரோ; இனி எனது வாழ்க்கையில் திருமணமே கிடையாது என்பதை திட்டவட்டமாக சொல்லிவிட்டார். தன்னுடைய கரியரில் மட்டுமே அவரது கவனம் இருக்கிறது. ட்ரெண்டாகும் பேச்சு: இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் பேசுகையில், "நெகட்டிவ்வும், பாசிட்டிவ்வும் வாழ்க்கையில் அங்கங்கள்தான். நமக்கு எது தேவையோ அதை மட்டும் எடுத்துக்கொண்டு செல்லலாம். நெகட்டிவ்வாக பேசுபவர்களை தடுக்க முடியாது. எனக்கு என்ன தேவையோ அதை மட்டும் நான் எடுத்துகொண்டு போய்கொண்டே இருப்பேன்" என்று சிரித்துக்கொண்டே ஓபனாக சொல்லியிருக்கிறார்.

LATEST News

Trending News