அஞ்சலியுடன் இரண்டாம் திருமணம்.. சரவணன் எடுத்த முடிவு! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்

அஞ்சலியுடன் இரண்டாம் திருமணம்.. சரவணன் எடுத்த முடிவு! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்

Pandian Stores 2 upcoming episodes promo: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அஞ்சலியை இரண்டாம் திருமணம் செய்துகொள்ள சரவணன் முடிவெடுத்துள்ள நிலையில், அதற்கான ப்ரொமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது குறித்த காட்சிகள் உள்ளன என்பதை பார்க்கலாம் வாங்க.

 

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பரபரப்பான கதைக்களத்துடன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியலில் தற்போது தங்கமயில் தனது வீட்டில் வந்து தங்கியிருப்பது சரவணனுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. குழந்தை பிறக்கும் வரை அவள் இங்குதான் இருப்பாள் என பாண்டியன் கூறிவிட்டதால், சரவணனால் ஒன்றும் செய்யவும் முடியவில்லை.

அஞ்சலியுடன் இரண்டாம் திருமணம்.. சரவணன் எடுத்த முடிவு! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் | Saravanan Second Marriage In Pandian Stores Serial

 

இரண்டாம் திருமணம்

இந்த சமயத்தில், தங்கமயிலுக்கு வளைகாப்பு நடந்த விஷயம், சரவணன் காதலித்து வரும் அஞ்சலிக்கு தெரியவர, இருவருக்கும் இடையே பிரிவு வந்துவிடுவது போல் உள்ளது. இந்த நிலையில், அஞ்சலியை இழந்துவிட கூடாது என்பதற்காக, அவளை இரண்டாம் திருமணம் செய்துகொள்ள சரவணன் முடிவு செய்துவிட்டார். சரவணனுக்கு துணையாக அவனுடைய தம்பிகள் மற்றும் மாமா உள்ளனர்.

அஞ்சலியுடன் இரண்டாம் திருமணம்.. சரவணன் எடுத்த முடிவு! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் | Saravanan Second Marriage In Pandian Stores Serial

ஆனால், இந்த திருமணம் பற்றிய விஷயம் வேறு யாருக்கும் தெரியவில்லை. கோவிலில் இவர்களது திருமணம் நடைபெற உள்ள நிலையில், இதனை சக்திவேல் பார்த்துவிடுகிறார். உடனடியாக பாண்டியனுக்கு போன் கால் செய்து, உன்னுடைய மகனுக்கு இரண்டாம் திருமணம் நடக்கிறது, முடிந்தால் தடுத்துக்கொள் என கூறுகிறார்.

இந்த தகவலை அறிந்து பதறியடித்து கோவிலுக்கு வரும் பாண்டியன், சரவணன் - அஞ்சலி திருமணத்தை தடுத்து நிறுத்துவாரா? அல்லது அவர் வருவதற்குள் சரவணனுக்கும் அஞ்சலிக்கும் திருமணம் நடைபெற்றுவிடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News