சந்தாவால் வருத்தத்தில் சோழன்-நிலா, ஒன்றும் சொல்லாத சேரன்... அய்யனார் துணை சீரியல் புரொமோ
அய்யனார் துணை
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் அய்யனார் துணை. 4 அண்ணன்-தம்பிகளின் வாழ்க்கை கதையாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இப்போது பரபரப்பான கதைக்களம் செல்கிறது.
சேரன்-சந்தாவை பல பிரச்சனைகளுக்கு பிறகு எப்படியோ திருமணம் செய்துகொண்டார்.

சந்தா வீட்டிற்கு வந்ததில் இருந்து நல்லவராக இருந்து வருகிறார். ஆனால் வீட்டின் உரிமைகளை தனது கைக்குள் வைக்க கொஞ்சம் கொஞ்சமாக காய் நகர்த்துகிறார்.
சந்தா திருமணம் செய்து வந்ததில் இருந்தே நிலாவை சமையல் அறைக்குள் வர விடவில்லை, ஏதேதோ சொல்லி அவரை வெளியே அனுப்பிக்கொண்டே இருந்தார்.

புரொமோ
இப்போது அய்யனார் துணை சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அதில் சேரன் சந்தாவிற்கு செலவிற்கு பணம் கொடுத்துவிட்டு வீட்டு செலவிற்கு நிலாவிடம் பணம் கொடுக்க நினைக்கிறார்.
ஆனால் அந்த பணத்தை சந்தா வாங்கிக்கொண்டு நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார். பின் நிலா வீட்டிற் செலவு கணக்கு எழுத உட்கார அனைவரும் அவரிடம் பணம் கொடுக்கிறார்கள். அந்த பணத்தை திடீரென சந்தா எடுத்துக்கொண்டு இனி வீட்டு செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார்.
அவர் சொன்னதை கேட்டதும் நிலா, சோழன், பாண்டி அனைவரும் ஷாக் ஆகிறார்கள், ஆனால் சேரன் ஒன்றும் சொல்லாமல் உட்கார்ந்திருக்கிறார். இதோ புரொமோ,