கரு கலைந்து விட்டது.. நிலாவை திட்டும் சந்தாவின் அம்மா.. அய்யனார் துணை சீரியல் ப்ரோமோ
Ayyanar thunai serial promo: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் விஷயங்கள் குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
அய்யனார் துணை
சின்னத்திரையில் டாப் 10 சீரியல்களில் ஒன்றாகவும், விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாகவும் உள்ளது அய்யனார் துணை. இந்த சீரியலில் தற்போது சந்தாவின் வருகைக்கு பிறகு வீட்டில் சில மாற்றங்கள் நடக்கின்றன. ஆனால், இந்த மாற்றங்கள் சிலருக்கு வருத்தத்தை தந்துள்ளது.

சந்தா கர்ப்பமாக இருக்கிறார் என்று பொய் சொல்லித்தான் திருமணம் நடைபெற்றது. அதனால்தான் இந்த திருமணத்திற்கு சந்தாவின் அம்மாவும் அப்பாவும் சம்மதித்தனர். ஆனால், தற்போது சந்தாவிற்கு மூன்றாவது மாதத்தில் சடங்கு செய்ய வேண்டும் என்பதற்காக, அவருடன் குடும்பத்தினர் சென்னைக்கு வருகிறார்கள்.

ப்ரோமோ
இதை எப்படி சமாளிப்பது என தெரியாமல் அய்யனார் துணை குடும்பத்தினர் கவலையில் இருக்க, சந்தா தன் கரு கலைந்துவிட்டது என அனைவரின் முன்னிலையிலும் கூறுகிறாள்.
இது, அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுக்க, சந்தாவின் அம்மா நிலாவை பார்த்து, "உன்னை நம்பித்தானே என் மகளை விட்டுட்டு போனோம்; இந்த வீட்டில் எல்லா வேலையையும் என் மகளை செய்விட்டு நீ வேடிக்கை பார்த்தியா?" என திட்டுகிறார்.
இதோ ப்ரோமோ: