சீன் அடிபொலியா இருக்கும்.. உறுதி கொடுக்கும் நஸ்ரியா.. சூர்யாவே ரசித்து பார்க்கிறாரே!
சென்னை: தமிழ், மலையாளம் மொழிகளில் பிஸியான நடிகையாக இருந்தவர் நஸ்ரியா நஸீம். சிறந்த நடிகை என்று பெயர் எடுத்த அவர்; நடிகர் ஃபகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதற்கு பிறகு ஒன்றிரண்டு மலையாள படங்களில் மட்டும் நடித்திருந்த அவர்; இப்போது சீன் படத்தின் மூலம் தமிழுக்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்நிலையில் துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
மலையாள திரையுலகத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நஸ்ரியா நஸீம் அங்கேயே ஹீரோயினாகவும் வளர்ந்தார். அவர் நடித்த நேரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதில் அவரது க்யூட்னெஸ்ஸை பார்த்த ரசிகர்கள் அவரை கொண்டாட தொடங்கினார்கள். அப்படிப்பட்ட சூழலில்தான் இயக்குநர் அட்லீ தமிழில் இயக்குநராக அறிமுகமான ராஜா ராணி படத்தில் ஒரு ஹீரோயினாக நடித்தார். அதுதான் முதல் நேரடி தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் செய்த நஸ்ரியா: அந்தப் படத்தில் நயன்தாராவுக்கு அதிக ஸ்க்ரீன் ஸ்பேஸ் இருந்தாலும்; நஸ்ரியா தனக்கு கிடைத்த கொஞ்ச நேரத்திலேயே அனைவரையும் தாண்டி ஸ்கோர் செய்துவிட்டார். சின்ன சின்ன எக்ஸ்பிரெஷன்களில் எல்லாம் பட்டையை கிளப்பினார். அந்தப் படத்தின் ரிலீஸ் சமயத்தில் நஸ்ரியாவுக்காகவே மீண்டும் மீண்டும் தியேட்டர்களுக்கு சென்று ராஜா ராணி படத்தை பார்த்த ரசிகர்கள் இருந்தார்கள். அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழிலும் பிஸியாக தொடங்கினார்.
நையாண்டி பிரச்னை: அந்தவகையில் திருமணம் என்னும் நிக்காஹ், வாயை மூடி பேசவும், நையாண்டி ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் நையாண்டி திரைப்படத்தில் தன்னை ஆபாசமாக காண்பித்துவிட்டார்கள் என்றும்; தான் இல்லாமலேயே சிஜியை வைத்து அந்த மாதிரியான காட்சிகளை உருவாக்கிவிட்டார்கள் என்றும் போர்க்கொடி தூக்கினார். மேலும் அதிலிருந்து தமிழுக்கு ஒட்டுமொத்தமாக முழுக்கு போட்டுவிட்டு மலையாளத்துக்கே சென்றுவிட்டார்.
ஃபகத் பாசிலுடன் திருமணம்: சூழல் இப்படி இருக்க ஃபகத் பாசிலோடு பணியாற்றியபோது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியதை அடுத்து; இரண்டு பேரும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் ஒதுங்கியிருந்த அவர்; ட்ரான்ஸ் உள்ளிட்ட சில படங்களில் மட்டும் தோன்றினார். இருப்பினும் தமிழில் அவர் ரீ என்ட்ரி கொடுக்காமல் இருந்தார். இப்போது சூர்யாவை வைத்து ஜித்து மாதவன் இயக்கியிருக்கும் சீன் படத்தில் ஹீரோயினாக கம்பேக் கொடுத்திருக்கிறார்.
தீபாவளிக்கு ரிலீஸ்: இப்படமானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அடுத்த மாதம் ரிலீஸாகவிருக்கிறது. நீண்ட வருடங்கள் கழித்து நஸ்ரியா தமிழுக்கு ரீ என்ட்ரி கொடுத்திருப்பதால் இதன் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. நிச்சயம் பழையபடி எக்ஸ்பிரெஷன்களில் கலக்குவார் என்றும்; ஓஜி எக்ஸ்பிரெஷன் குயின் வந்துவிட்டார் என்றும் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில் துபாயில் நடந்த சீன் பட நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் அவர்.நஸ்ரியா பேச்சு: அந்த விழாவில் பேசிய அவர், "இங்கே வரும்போதெல்லாம் எனது சொந்த ஊருக்கு திரும்பி வருவது மாதிரி எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். நான் துபாயில்தான் படித்து வளர்ந்தேன். 12 வருடங்களுக்கு பிறகு தமிழ் படம் ஒன்றில் நடிக்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்த ஜித்து மாதவனுக்கு நன்றி. இப்படத்துக்காக நான் கடந்து வந்த பயணம் மிகச்சிறந்த அனுபவங்களில் ஒன்று. சூர்யாவுக்கும், நஸ்லினுக்கும் நன்றி. நவம்பர் ஆறாம் தேதி வெளியாகும் சீன் படத்தை பாருங்கள். அடிபொலி படமாக இருக்கும். தியேட்டரில் நீங்கள் விழுந்து விழுந்து சிரிக்கும் தருணங்கள் நிச்சயம் இருக்கும்" என்றார். நஸ்ரியா பேச பேச சூர்யா மெய் மறந்து ரசித்து பார்த்ததும் கவனத்தை ஈர்த்தது.