குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் கவரும் Wildwood! எப்படி இருக்கிறது இந்த அனிமேஷன் திரைப்படம்?
ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Wildwood அனிமேஷன் திரைப்படம் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. இயக்குநர் டிராவிஸ் நைட் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதா என்பதைப் பார்ப்போம்.
போர்ட்லேண்டைச் சேர்ந்த ப்ரூ மெக்கீல் என்ற சிறுமி தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். ஒருநாள் அவரது தம்பி மேக்கை காக்கைக் கூட்டம் ஒன்று தூக்கிச் செல்கிறது. இதனால் அதிர்ச்சியடையும் ப்ரூ, தனது தம்பியை மீட்பதற்காக மர்மமான காட்டுப் பகுதிக்குள் பயணிக்கிறார்.
அவருடன் வகுப்புத் தோழன் கர்டிஸும் இணைந்து கொள்கிறார். அந்தக் காட்டிற்குள் பேசும் ஓநாய்கள், விலங்குகளுடன் வாழும் மனிதர்கள் எனப் பல விசித்திரமான உலகங்களைக் காண்கின்றனர்.
தம்பியை மீட்கும் முயற்சியில் பல ஆபத்துகளையும் மர்மங்களையும் எதிர்கொள்ளும் ப்ரூ, இறுதியில் வெற்றி பெற்றாரா என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் காட்சியமைப்புகள், அனிமேஷன் தொழில்நுட்பம், சண்டைக்காட்சிகள் மற்றும் பின்னணி இசை ஆகியவை சிறப்பாக அமைந்துள்ளதாக விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக ப்ரூ கழுகுடன் பறக்கும் சண்டைக்காட்சியும், இறுதிக்கட்ட மோதலும் ரசிகர்களுக்கு சிறந்த காட்சி அனுபவத்தை வழங்குகின்றன. நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகளும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.
இருப்பினும், குழந்தைகளைக் குறிவைத்து உருவாக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படத்தில் இரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றிருப்பது சற்று குறையாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மொத்தத்தில், Wildwood குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ரசிக்கக்கூடிய ஒரு சுவாரஸ்யமான பேண்டஸி அனிமேஷன் திரைப்படமாக அமைந்துள்ளதாக விமர்சனம் தெரிவிக்கிறது.